ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான அழகான கதை – கும்கி 2 படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி
KUMKI 2 Movie Official Teaser: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கும்கி. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பிரபு சாலமன் எழுதி இயக்கி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கும்கி. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு (Actor Vikram Prabhu) நாயகனாக நடித்து இருந்தார். இது இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடிகர்கள் செம்மரப்பள்ளி மாணிக்யம், லட்சுமி மேனன், தம்பி ராமையா, அஷ்வின் ராஜா, ஜோ மல்லூரி, ஸ்ரீஜித் ரவி, இளைய பாலையா, யார் கண்ணன், மூணார் ரமேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான திருப்பதி ப்ரதர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் என். லிங்குசாமி, என். சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




கும்கி 2 படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி:
முதல் பாகத்தில் ஒரு யானை பாகனுக்கும் யானைக்கு இடையே உள்ள பாசத்தை மிகவும் அழகாக காட்டியிருப்பார்கள். இதன் காரணமாகவே இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது.
அதன்படி இயக்குநர் பிரபு சாலமன் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் மதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். இந்தப் படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி அதில் ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான நட்பு மற்றும் பிணைப்பைப் பற்றிய அழகான கதை. முழு குழுவிற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அந்தப் பதிவில் விஜய் சேதுபதி தெரிவித்து இருந்தார்.
Also Read… அனிருத்தின் பிறந்த நாள்… ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய பாரடைஸ் படக்குழு
விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Launching the teaser of #Kumki2 – A beautiful story about friendship and bonding between a man and an elephant.
Sending my best wishes to the entire team.
Kumki-2 from November 14.#BornAgain@penmovies @jayantilalgada @gada_dhaval @prabu_solomon… pic.twitter.com/o4Iin7uRQJ
— VijaySethupathi (@VijaySethuOffl) October 18, 2025
Also Read… அந்தப் படத்தின் கதையை படுத்துக்கொண்டே தான் கேட்டேன் – நடிகர் யோகி பாபு