AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவில் இணைந்தால் விஜய் ‘கெய்னர்’; இல்லையென்றால் ‘லூசர்’ – ஜெயக்குமார்

AIADMK’s Jayakumar: சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக இருக்க வேண்டும், பறக்கும் படைகளில் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறினார்.

அதிமுகவில் இணைந்தால் விஜய் ‘கெய்னர்’; இல்லையென்றால் ‘லூசர்’ – ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Mar 2026 18:30 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். கூட்டம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் அதிமுக சார்பில் பல முக்கிய கருத்துகள் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக அதிமுக முன்வைத்த கோரிக்கைகள்

ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள மாறுபாடுகள் குறித்து அதிமுக பிரதிநிதிகள் எடுத்துரைத்ததாக ஜெயகுமார் தெரிவித்தார். கடந்த காலங்களில் போல தேர்தலுக்கு முன்பு 10 நாட்கள் வரை புதிய வாக்காளர்களை சேர்க்கும் நடைமுறை இருந்ததாகவும், அதேபோல் துணை வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக அவர் கூறினார். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதிகாரிகள் எந்தவித பாரபட்சமும் இன்றி செயல்பட வேண்டும் என்றும், அரசியல் சார்பின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற குற்றச்சாட்டு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளபோதும், ஆளும் அரசு அவற்றை மதிக்காமல் செயல்படுகிறது என ஜெயகுமார் குற்றம்சாட்டினார். ஆளும் கட்சிக்கு ஒரு விதியும், எதிர்க்கட்சிகளுக்கு மற்றொரு விதியும் இருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். பறக்கும் படைகளிடம் புகார் அளித்தால், அவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். எனவே பறக்கும் படைகளில் மத்திய அரசின் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்ததாக தெரிவித்தார். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

வாக்குப்பதிவு மற்றும் வசதிகள் குறித்து வலியுறுத்தல்

தபால் வாக்குகளை அரை மணி நேரத்தில் எண்ணி முடிக்க வேண்டும் என அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதாக ஜெயகுமார் தெரிவித்தார். மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய் குறித்து ஜெயகுமார் கருத்து

அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், விஜய் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். தம்பி விஜய் அதிமுக கூட்டணியை ஏற்று கொண்டு எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவர் பயன் அடைவார் என்றும், இல்லையெனில் அது அவருக்கே இழப்பாக இருக்கும் என்றும் கூறினார். அதுகுறித்து முடிவு எடுப்பது முழுமையாக விஜய்யின் விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us