பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினான் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் – 13 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் தலைவா படம்!
Thalaivaa Movie Completes 13 Years Today | நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தலைவா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி விஜயின் நடிப்பில் வெளியான படங்களில் சில அரசியல் பேசும் படங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி அவரது நடிப்பில் அரசியல் பேசி பல சர்ச்சைகளை கிளப்பிய படங்களில் ஒன்று தான் தலைவா படம். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் எழுதி இயக்கி இருந்தார். படம் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். அதன்படி நடிகை அமலா பால் நாயகியாகவும் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
அதன்படி சந்தானம், சத்யராஜ், ராகினி நந்தவானி, நாசர், அபிமன்யு சிங், ராஜீவ் பிள்ளை, உதயா, என்.எல். சீனிவாசன், தனு வித்யார்த்தி, எம்.ஆர்.கிஷோர் குமார், பொன்வண்ணன், ரேகா, மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், சுப்பு பஞ்சு, மதிவாணன் சக்திவேல், வருண், ரவி பிரகாஷ், சதீஷ் கிருஷ்ணன், பிரபு, பூரன் கிரி, கே. புஜ்ஜி பாபு, ராஜ் அர்ஜுன், ஜப்பான் குமார், ரஞ்சீவ் வர்மா, நிஷிகாந்த் தீட்சித், விஜய் வர்மா, சாம் ஆண்டர்சன் மற்றும் ஸ்டண்ட் சில்வா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




13 ஆண்டுகளைக் கடந்தது தளபதி விஜயின் தலைவா படம்:
தளபதி விஜய் நடிப்பில் அரசியல் பேசி சர்ச்சையில் சிக்கிய படங்களில் ஒன்றான இந்த தலைவா படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான தலைவா தலைவா என்ற பாடல் தளபதி விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன்பும் தற்போதும் இந்தப் பாடல் அதிகம் பயண்படுத்தப்பட்டு வருகின்றது.
Also Read… கோட் படத்தின் நடிகர்கள் தேர்வு இப்படிதான் இருந்தது – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Thalaivaa turns 13! The vibe remains timeless ❤️🔥
➡️ https://t.co/seQTwFTop0#Thalaivaa pic.twitter.com/b5JQGmlklQ
— Sony Music South India (@SonyMusicSouth) August 9, 2026
Also Read… Toxic: அப்பா மகனின் ரிவெஞ்ச்.. யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!