பேமிலி பேக்ரவுண்ட் கதையில்… சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ட்ரெய்லர் வெளியானது!
Vishwanath And Sons Trailer: தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவர் இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் நடித்துவந்த படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிற நிலையில், இன்று (07/08/2026) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் வெங்கி அட்லூரி (Venky Atluri). இவர் நேரடியாக தமிழில் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons). இப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தில் முதல் முறையாக இணைந்திருக்கும் நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த படத்தை சித்தாரா எண்டெர்டைமெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் நாக வம்சி (Naga Vamsi) தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகியுள்ளது.
இது ஒரு பேமிலி பேக்ரவுண்ட் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், சூர்யா இதில் “சஞ்சய் விஸ்வநாத்” என்ற வேடத்தில் நடித்துள்ளார். வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாகும் நிலையில், இன்று (07/08/2026) ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தர்மன் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – ராஷி கண்ணா!




விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ட்ரெய்லர் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது சிறப்பான கதையில் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதில் சூர்யா தனது குழந்தையை நோயிலிருந்து காப்பாற்ற நினைக்கிறார். அதன் டோனராக மமிதா பைஜூ இருக்கிறார். இந்த சிகிச்சையின் சமயத்தில் மமிதா மற்றும் சூர்யாவின் இடையே காதல் எவ்வாறு மலர்கிறது என்பதே இப்படத்தின் மெயின் கரு ஆகும். இதில் ஒலிம்பிக் வீரனாக சூர்யா நடித்துள்ள நிலையில், ஒரு பக்கா பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. கருப்பு படத்திற்கு பின் சூர்யாவிற்கு வெற்றியை கொடுக்கும் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட கதை இதுதானா?:
நடிகர் சூர்யா இப்படத்தில் லீட் நாயகனாக நடிக்க, அவருடன் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் கேஜிஎப் புகழ் ரவீனா டாண்டன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா சஞ்சய் விஸ்வநாத் என்ற தொழிலதிபராக நடித்துள்ளார். இப்படத்தின் கதையானது, “நோய்வாய்ப்பட்ட தன் சிசுவைக் காப்பாற்ற, அதன் வாடகைத் தாயுடன் முன்னாள் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் வீரர் (சூர்யா) ஒருவர் உணர்ச்சிப்பூர்வமான உறவில் ஈடுபடுகிறார்” என்பது தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? – வைரலாகும் தகவல்!
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், நிச்சயம் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ ஏ தரச் சான்றிதழை கொடுக்கும் என கூறப்படுகிறது.