கோட் படத்தின் நடிகர்கள் தேர்வு இப்படிதான் இருந்தது – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
Archana Kalpathi interview | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தளபதி விஜய் நடிப்பில் உருவான கோட் படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைர்லாஅகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் இறுதியாக இரட்டை வேடத்தில் நடித்தப் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இயக்குநர் வெங்கட் பிரபு எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் டீ ஏஜிங் பயன்படுத்து நடிகர் விஜயே அப்பா மற்றும் மகன் என காட்டி இருந்தனர். மேலும் இந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி அமரன், லைலா, யுகேந்திரன், விடிவி கணேஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மேலும் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கோட் படத்தின் நடிகர்கள் தேர்வு இப்படிதான் இருந்தது:
தி கோட் படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்வது குறித்துப் பேசிய அர்ச்சனா கல்பாத்தி, ஆரம்பத்தில் 90-களின் தலைமுறை நடிகர்களை இதில் நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் இருந்ததாகக் கூறினார். அந்த எண்ணம் உருவானதும், படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நாங்கள் விவாதித்தோம். அப்போது பிரபு தேவா மற்றும் சிலரின் பெயர்கள் பரிசீலனைக்கு வந்தன.
இப்படத்தை பல சர்வதேச இடங்களுக்குக் கொண்டு சென்று படமாக்கவும் நாங்கள் திட்டமிட்டோம்; அதன்படி வெளிநாடுகளில் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். இது மிகவும் சவாலான ஒரு படப்பிடிப்பாக அமைந்தது; குறிப்பாக, சுமார் 5,000 பேர் பங்கேற்ற சிஎஸ்கே ஜெர்சி தொடர்பான காட்சியை மிகப்பிரம்மாண்டமான அளவில் படமாக்க வேண்டியிருந்தது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது, அதைப் பார்த்த எனக்கும் சில எண்ணங்கள் தோன்றின. படம் எப்படி அமையப்போகிறது என்றும், நான் கற்பனை செய்திருந்ததற்கு அது பொருந்துமா என்றும் நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
இப்படத்திற்காக ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் சுமார் 10,000 வரை இருந்திருக்கலாம். எனவே, எங்களின் அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் அந்த ரசிகர்களின் வடிவமைப்புகளை விடவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால், ரசிகர்கள் உருவாக்கிய அந்தப் போஸ்டர்களும் மிகச் சிறப்பாகவே இருந்தன என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also Read… எனது அந்தப் படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க வேண்டியது – மாதவன் சொன்ன விசயம்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ArchanaKalpathi: When it came to the casting of #GOAT, the initial idea was to bring in actors from the ’90s generation. Once we had that idea, we discussed who could be cast in the film, and then names like #PrabhuDeva and a few others came up.
We also had the idea of taking… pic.twitter.com/2UOhiOGGuX
— Movie Tamil (@_MovieTamil) August 8, 2026
Also Read… Vishal: உதயநிதி பேசுனது தப்பு-னால தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க – விஷால்!