AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கரூர் சம்பவ வழக்கில் தீர்ப்பு வந்தால் “தவெக க்ளோஸ்”.. பிரசாரத்தில் இறங்கி அடித்த எடப்பாடி கே. பழனிசாமி!

EPS Criticized TVK Govt : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவ வழக்கில் தீர்ப்பு வெளியானலா தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியே இருக்காது என்று மதுராந்தகத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

கரூர் சம்பவ வழக்கில் தீர்ப்பு வந்தால் “தவெக க்ளோஸ்”.. பிரசாரத்தில் இறங்கி அடித்த எடப்பாடி கே. பழனிசாமி!
முதல்வர் விஜய்- எடப்பாடி பழனிசாமி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 24 Sep 2026 22:01 PM IST

தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாமண்டூர் பகுதியில் இன்று வியாழக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த மதுராந்தகம் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு இடைத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும். பணம் மற்றும் பதவி ஆசையால் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் டெபாசிட் இழந்து தோல்வி அடைய வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் இடம் குதிரை பேரம் பேசி பதவியை ராஜினாமா செய்ய வைத்த 5 நிமிடங்களில் தவெகவில் இணைந்துள்ளனர்.

கரூர் சம்பவத்தில் 70 நாள்கள் வீட்டில் ஒளிந்தவர் விஜய்

இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் இப்படி ஒரு தரம் கெட்ட செயலை செய்தது கிடையாது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மேற்கொண்ட கரூர் பயணத்தின் போது, 41 பேர் பரிதாபமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தின் போது ஓடியவர் 70 நாட்களுக்கு வெளியே வரவில்லை. அந்த 70 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத ஒருவர் எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். தனது பிரச்சாரத்துக்கு வந்து உயிரிழந்த அப்பாவி மக்களின் உடலுக்கு கூட அவர் அஞ்சலி செலுத்த வரவில்லை.

மேலும் படிக்க: தமிழகத்தில் ஜனவரி மாதத்துக்குள் தவெக ஆட்சி கவிழும்.. திமுக ஆட்சியமைக்கும்.. ஆர். எஸ். பாரதி!

கரூர் வழக்கு தீர்ப்பு வெளியானால் தவெக இருக்காது

இந்த சம்பவத்தின் போது, கரூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தை 15 நாட்கள் பூட்டிவிட்டு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவாகிவிட்டார். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியானால் தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்குமா.. இல்லையா என்பது தெரிய வரும். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை விரைந்து முடிக்கப்படும் நிலையில், இதற்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளிவரும்.

ரீல்ஸ் வீடியோ தான் தவெக அரசின் மூலதனம்

இதில், முதல்வர் விஜய் மீதான சிபிஐ விசாரணை தற்போது வரை முடிவடையவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ரீல்ஸை வைத்து தான் தமிழக வெற்றிக் கழகம் ஓடிக்கொண்டிருக்கிறது. ரீல்ஸ் மட்டுமே தவெகவின் மூலதனமாக இருந்து வருகிறது. தவெக ஆட்சி அமைத்த 4 மாதங்களில் பல்வேறு போராட்டங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெகவுக்கு விருப்பம் இருந்தால் வாக்களியுங்கள்.. இல்லையெனில்.. வேட்பாளர் சத்யபாமா பேச்சால் மக்கள் அதிர்ச்சி!

Follow Us