தவெகவுக்கு விருப்பம் இருந்தால் வாக்களியுங்கள்.. இல்லையெனில்.. வேட்பாளர் சத்யபாமா பேச்சால் மக்கள் அதிர்ச்சி!
TVK candidate Sathyabama : தமிழக வெற்றிக் கழகத்துக்கு விருப்பம் இருந்தால் வாக்களியுங்கள்.. இல்லையெனில் விட்டுவிங்கள் என்று அந்தக் கட்சியில் தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா தெரிவித்தது தொகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர் பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்றார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர் 6- ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், எஎல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். இது, தாராபுரம் தொகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக, சத்தியபாமா பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் எல்லாம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டடம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸ் பாதுகாப்புடன் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
தவெகவுக்கு விருப்பம் இருந்தால் வாக்களியுங்கள்
இந்த நிலையில் குண்டடம் அருகே உள்ள பெரிய குமாரபாளையம் ஊராட்சி பகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா இன்று வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார். அப்போது, அந்த பகுதி மக்கள் அவரது வாகனத்தை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரம் அடைந்த வேட்பாளர் சத்தியபாமாவும், தவெகவினரும் ஒலி வங்கியில் விருப்பம் இருந்தால் தவெகவுக்கு வாக்களியுங்கள்… இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று தெரிவித்தனர். இதை கேட்டு வாக்காளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. 3 காவல் அதிகாரிகளுக்கு சம்மன்.. மேலும் புதிய ஆபாச வீடியோக்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி!




பிரசாரத்தை பாதியில் நிறுத்தி சென்ற தவெக வேட்பாளர்
இதனை தொடர்ந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமா தனது பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது அந்தக் கட்சியினர் மத்தியில் கடும் கலக்கத்தையும், பின்னடையும் ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருந்தார். ஆனால், பதவி ஏற்ற சில நாட்களிலேயே, திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்தியபாமா, அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தாராபுரத்தில் மக்கள் பணிகள் பாதிப்பு
முன்னதாக, தவெக அரசு பெரும்பான்மை நிரூபித்தபோது ஆதரவாக சத்தியபாமா வாக்களித்து இருந்தார். இதனால், அரசியல் லாபத்துக்காக தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைந்ததாக தாராபுரம் தொகுதி மக்கள் குற்றம் சாட்ட தொடங்கினர். அத்துடன், தாராபுரம் தொகுதியில் எம்எல்ஏ இல்லாத காரணத்தால் மக்களுக்கான அடிப்படை தேவைகள் உள்ளிட்டவை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஜனவரி மாதத்துக்குள் தவெக ஆட்சி கவிழும்.. திமுக ஆட்சியமைக்கும்.. ஆர். எஸ். பாரதி!