AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“ஜெம் வீரமணியால் எனது உயிருக்கு ஆபத்து” பகீர் கிளப்பிய உதவியாளர் சாந்தி.. வீடியோ வாக்குமூலம் வைரல்!

Gem Granites Veeramani Assistant Shanthi Video : தமிழகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரி கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மற்றும் அவரது மகன் சித்தார்த்தால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது உதவியாளர் சாந்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

“ஜெம் வீரமணியால் எனது உயிருக்கு ஆபத்து” பகீர் கிளப்பிய உதவியாளர் சாந்தி.. வீடியோ வாக்குமூலம் வைரல்!
ஜெம் வீரமணி, உதவியாளர் சாந்தி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Sep 2026 22:06 PM IST

தமிழகத்தில் பிரபல தொழிலதிபராக விளங்கி வரும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 10- க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வீரமணியையும், அவரது உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது. இந்த நிலையில், கைதாவதற்கு முன்பு சாந்தி தனக்கு வீரமணி மூலமாக உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் ஜெம் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் வீரமணி மற்றும் அவரது மகன் சித்தார்த் வீரமணி ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது.

13 வயதில் பாலியல் வன்கொடுமை செய்த வீரமணி

நான் சிறு வயதாக இருக்கும் போதே வீரமணியே குடும்ப நண்பராக எனக்கு தெரியும். எனக்கு 13 வயது இருக்கும் போது, எனது அறியாமையை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த வக்கிர புத்தியை மறைத்து எனக்கு ஒரு காட்பாதர் போல இருப்பதாக நம்ப வைத்தார். இதனால், அவர் கூறிய அனைத்தையும் நான் செய்து வந்தேன். அவரது தொழிலில் நெருக்கடி ஏற்பட்ட போது, பல்வேறு வழிகளில் நிதியை திரட்டி கொடுத்துள்ளேன். இதனால், எனக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையில் என்னிடம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தேன்.

மேலும் படிக்க: தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!

வீரமணியாலும், அவரது மகனாலும் உயிருக்கு ஆபத்து

இவ்வளவு செய்தும் அவராலும், அவரது மகனாலும் எனக்கு ஆபத்து உள்ளது என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஏற்கெனவே, வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது அவரது உதவியாளர் வெளியிட்ட வீடியோவும் இந்த வழக்கின் வேகத்தை அதிகரித்துள்ளது. தற்போது, இந்த வீடியோ வாக்குமூலம் மற்றும் வழக்கை மறைக்க கைமாறியதாக கூறப்படும் ரூ. 70 கோடி பரிமாற்றம் குறித்த புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டுக்கு தப்பி சென்றவருக்கு போலீஸ் சம்மன்

முன்னதாக, சாந்தி மற்றும் வீரமணியின் மற்றொரு உதவியாளரான கணேசன் ஆகியோரின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்ததில் சிறுமிகளுடன், வீரமணி இருக்கும் வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. அத்துடன் பென்டிரைவ் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் வெளிநாட்டுக்கு தப்பி சென்று நிலையில், போலீசார் சம்மன் அனுப்பி அவர்களை தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மின்வெட்டுக்கு புதிய தியரி.. விஞ்ஞானிகளையே விஞ்சிய தவெக அமைச்சர்கள்.. டி.டி.வி. தினகரன் மரண கலாய்!

Follow Us