AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நெருங்கும் தீபாவளி.. பட்டாசு கடைகள் அமைப்பதற்கு விண்ணப்பிப்பது எப்படி? அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

How To Apply Firecracker Shop License : தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான அறிவுறுத்தல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நெருங்கும் தீபாவளி.. பட்டாசு கடைகள் அமைப்பதற்கு விண்ணப்பிப்பது எப்படி? அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
பட்டாசு கடை ( கோப்புப்படம்)
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 Sep 2026 18:30 PM IST

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக புத்தாடை அணிந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 2026- ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 8- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே அனைவரது ஞாபகத்திற்கும் முதலில் வருவது பட்டாசுகள் தான்… இதில், பல்வேறு வகையான வண்ண பட்டாசுகள் மற்றும் பல்வேறு விதமான வெடிக்கும் பட்டாசுகள் முன்னுரிமை பிடித்துள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய விதமான பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரு பண்டிகையை மையம் மையமாக வைத்து சிவகாசியில் ஏராளமான தொழிலாளர்கள் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு கடைகள் அமைப்பதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

இதில், சீன பட்டாசுகளை தவிர்த்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பட்டாசுகளை தீபாவளி பண்டிகை நாட்களில் விற்பனை செய்வதற்கு அரசு சார்பில் தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான முக்கிய அறிவுறுத்தல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெறுவதற்கு http://tnsevai.tn.gov.in – என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கடலூரை உலுக்கிய கொடூரம்.. 3 வயது குழந்தை மயங்கிய நிலையில் மீட்பு.. பின்னணியில் சிக்கிய ஐடிஐ மாணவன்!

விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள்

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பல்வேறு ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், தேவையான விண்ணப்பங்கள் எவையெனில்,

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • ஆதார் அடையாள அட்டை.
  • அரசு அடையாள அட்டை.
  • பட்டாசு கடை அமைப்பதற்காக கடையின் பட்டா அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம்.
  • கடையின் வரி ரசீது.
  • சுய உறுதிமொழி பத்திரம்.
  • கட்டிட அமைவிட வரைபடம் அல்லது கட்டிட திட்ட அனுமதி ( ஏ 4 அளவில்).
  • உரிமை கட்டணம் ரூ. 600-ஐ அரசு கணக்கில் IFHRMS- என்ற இணையதளம் வாயிலாக செலுத்தியதற்கான அசல் செலுத்துகை சீட்டு ( E-Chellan). ஆகிய ஆவணங்கள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் இன்றி பட்டாசுகள் விற்றால் என்ன ஆகும்

அத்துடன், பட்டாசு கடை அமைப்பதற்கான உரிமம் பெறாமல் பட்டாசுகள் விற்பனை செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு கடை அமைப்பதற்கான தற்காலிக உரிமம் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். பொது மக்களுக்கு சிரமம் இல்லாத, பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அங்கே பட்டாசு கடை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!

Follow Us