பேட்மிண்டன் வீரர் வாழ்வில் விளையாடிய எமன்.. சென்னையில் காவல் உதவி ஆணையர் கண் முன்னே நிகழ்ந்த சோகம்..!
Chennai ACP Son Dies : சென்னையில் பேட்மிண்டன் விளையாடிய சென்னை காவல் உதவி ஆணையர் கண் முன்னே மாரடைப்பால் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
சென்னையில் காவல் உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் கௌதமன். இவரது மகன் சிவ சூர்யா ( 23 வயது). பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், தனது தந்தையுடன் பேட்மிண்டன் விளையாட செல்வது வழக்கம். அதன்படி, இவர்கள் இருவரும் போரூரில் செயல்பட்டு வரும் தனியார் உள்புற பேட்மிண்டன் மைதானத்தில் இன்று புதன்கிழமை பேட்மிண்டன் விளையாடச் சென்றனர். அங்கு, இருவரும் விருவிருப்பாக பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென சிவ சூர்யா மைதானத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத ஆவல் உதவி ஆணையர் கௌதமன் அச்சமடைந்து சத்தம் போட்டார்.
பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
உடனே, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சக வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து இளைஞர் சிவ சூர்யாவை மீட்டு கார் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிவ சூர்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட, சிவ சூர்யாவின் தந்தையும், காவல் உதவி ஆணையருமான கௌதமன் கட்டி அணைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
மேலும் படிக்க: கடலூரை உலுக்கிய கொடூரம்.. 3 வயது குழந்தை மயங்கிய நிலையில் மீட்பு.. பின்னணியில் சிக்கிய ஐடிஐ மாணவன்!




போரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அவர்களும் சிவ சூர்யாவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். இந்த சோகமான நிகழ்வு அங்கி இருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போரூர் பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, இளைஞர் சிவ சூர்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்த சோகம்
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் கௌதமன் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையுடன், வழக்கம் போல பேட்மிண்டன் விளையாட சென்ற மகன் தனது கண்முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தவெக நிர்வாகி திடீர் தற்கொலை.. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மீது பகீர் புகார்.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலால் பதற்றம்!