AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் அதிரடி கைது.. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு.. பின்னணி என்ன!

Pasumpon Makkal Katchi Leader : தூத்துக்குடியில் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரை மிரட்டி ரூ. 1 கோடி மாமுல் கேட்ட புகாரின் பேரில், பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் இசக்கிராஜாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் அதிரடி கைது.. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு.. பின்னணி என்ன!
கைதான ப.ம.க. தலைவர் இசக்கி ராஜா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Sep 2026 19:40 PM IST

தூத்துக்குடி மாவட்டம், 3- ஆவது மைல் பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா ( 42 வயது). இவர், பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பிரபல ஹைப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் தங்க நகை வாங்கினார். அந்த நகையில் அதிக அளவு உலோகம் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, நகை வாங்கிய நபருக்கு ஆதரவாக பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் இசைக்கி ராஜா, மேற்கண்ட ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். அப்போது, நகைக்கான தொகை ரூ. 4 லட்சத்து 22 ஆயிரத்தை அவர் பெற்றுள்ளார். ஆனால், அதனுடன் உரிமையாளரை மிரட்டி ரூ. 1 கோடி மாமுல் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இல்லையெனில் கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி எஸ்.பி.யிடம் புகார்

இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், வணிகர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ். பி. உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், தூத்துக்குடி தென் பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை காலை 3- ஆவது மைல் பகுதியில் உள்ள பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவின் வீட்டுக்கு சென்றனர்.

மேலும் படிக்க: மதுவை விற்க கள்ளுக்கு தடையா? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்.. ஆவேசத்தில் கொந்தளிப்பு!

பலத்த பாதுகாப்புடன் ப.ம.க. தலைவர் கைது

அங்கு, அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக தென்பாக்கம் காவல் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளரை மிரட்டி மாமுல் கேட்டது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இசக்கி ராஜா ஆஜர்படுத்தப்பட்டார்.

அ.பு.த.ம.மு.க. பொதுச்செயலர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இசக்கி ராஜாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று தூத்துக்குடி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர், அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!

Follow Us