AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி.. உயர்நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு.. பணிகள் தொடங்குமா?

New Secretariat DMK File Petition : பட்டினப்பாக்கத்தில் ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மனு தாக்கல் செய்தார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி.. உயர்நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு.. பணிகள் தொடங்குமா?
சென்னை உயர்நீதிமன்றம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Sep 2026 15:18 PM IST

சென்னை மாவட்டம், பட்டினப்பாக்கத்தில் ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும், பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மீனவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பட்டினப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். எனவே, இந்த பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கடல் பகுதியில் 500 மீட்டர் தொலைவில் கட்டுமானம் கூடாது

அத்துடன் பட்டினப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். மேலும், பட்டினப்பாக்கம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியில் கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தல் உள்ளது. இதை மீறி, புதிய தலைமை செயலகம் அந்த பகுதியில் கட்டுவதற்கு சட்டப்படி அனுமதி கிடையாது. அத்துடன் மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட துறைகளின் ஒப்புதல் விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் படிக்க: பெண் மீது தீ வைத்த நபர் – துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

புதிய தலைமை செயலக அரசாணை வெளியீடு தன்னிச்சையானது

இது மட்டுமின்றி புதிய தலைமை செயலகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்ததற்கான காரணம் எதுவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், ரூ. 1, 200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என அரசாணை பிறப்பித்து இருப்பது தன்னிச்சையானது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இட நெருக்கடி காரணமாக புதிய தலைமை செயலகம்

தமிழக தலைமைச் செயலகம் தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, முதல்வர் அலுவலகம், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் அலுவலகங்கள் இட நெருக்கடியில் செயல்பட்டு வருவதாகவும், இதற்காக புதிதாக தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், ரூ. 1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு

இதை தொடர்ந்து, தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, அந்த பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கு தடை கோரி திமுக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஜெம் கிராணைட் வீரமணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை… திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்

Follow Us