ஜெம் கிராணைட் வீரமணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை… திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்
Former Minister Ragupathy Clarifies: ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில் திமுகவுக்கும் வீரமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 22 : ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு பதிலளித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, ஜெம் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். பின்பு எப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீரமணி வழக்கில் புதிய ஆதாரங்கள், சாட்சி அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக காத்திருந்தோம் என்றார்.
வீரமணிக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை என முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்
ஜெம் வீரமணி வழக்கை கைவிடுவதாக சொல்லவில்லை. உரிய ஆதாரங்களுக்காக காத்திருந்தோம். ஜெம் வீரமணிக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெம் வீரமணி வழக்கில் யார் தொடர்புடையதாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : காலை உணவுத் திட்டத்தை துவக்கம் – மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் விஜய்




மேலும் பேசிய அவர், ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அக். 6ம் தேதி வந்த புகாருக்கு அக்.7ம் தேதியே FIR பதிவு செய்தோம். எங்களுக்கு வேண்டியவராக இருந்தால் காலம் தாழ்த் இருப்போமே. ஆதாரங்கள் கிடைத்ததும் மேல் நடவடிக் எடுக்கப்படும் என்றுதான் நீதிமன்றத்தில் தெரிவித்தோம். இவர்கள் ஆட்சியில் ஆக.29ம் தேதி வந்த ஒரு வழக்கிற்கு செப்.21 வரை நடவடிக்கை எடுக்கல அப்போ இந்த ஆட்சி கோமா ஸ்டேஜில் இருந்துச்சா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நேரடியாக குதிரை பேரம் நடந்துள்ளது. ராஜினாமா செய்து தவெகவில் போட்டியிடும் வேட்பாளர்களால் மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. “ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிரான வழக்கில் FIR பதிவு செய்தது திமுக அரசுதான். பாலியல் வழக்கில் திமுக மீது வீண் பழி சுமத்துகிறது தவெக அரசு என்றார்.
சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று விபசார தடுப்பு பிரிவு போலீசாரிடம் பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில் அவர், பிரபல தொழில் அதிபரான ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் வீரமணி சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக வீடியோ காட்சிகள் அடங்கிய ‘பென்டிரைவ்’வையும் கொடுத்து சென்றார்.
இதையும் படிக்க : சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – 800 பேருக்கு வேலை வாய்ப்பு – முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
புகாரின்பேரில் அப்போது விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே வீரமணியால் பாதிக்கப்பட்டதாக 9 சிறுமிகள் அடுத்தடுத்து புகார் மனு அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வீரமணி தொழில் அதிபர் என்பதால் ஒவ்வொரு வரவு- செலவு கணக்குகளையும் டைரியில் எழுதி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவரை கைது செய்த போது அவருடைய வீட்டில் இருந்து டைரியை போலீசார் பறிமுதல் செய்தி ருக்கிறார்கள். அந்த டைரியை போலீசார் புரட்டி பார்த்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.