AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்த காவலர்.. போலீசில் பரபரப்பு புகார்.. சென்னை காவல்துறையில் பரபரப்பு!

Chennai Crime : சென்னையில் பாலியல் தொல்லை அளித்ததாக தலைமை காவலர் மீது அவரது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை காவல்துறையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்த காவலர்.. போலீசில் பரபரப்பு புகார்.. சென்னை காவல்துறையில் பரபரப்பு!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Sep 2026 13:17 PM IST

சென்னையில் தலைமை காவலர் மீது திருவள்ளூர் காவல் நிலையத்தில் அவரது வளர்ப்பு மகள் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது தாயை 2- ஆவதாக திருமணம் செய்து கொண்ட தலைமை காவலர் தனக்கு 17 வயது இருக்கும் போதிலிருந்து தற்போது வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வருகிறார். இந்த சம்பவத்தை வெளியே யாரிடமாவது கூறினால் எனது தாயை கொலை செய்து விடுவதாக, தலைமை காவலர் மிரட்டினார். இதன் காரணமாக உயிருக்கு பயந்து அவர் கூறியபடி இந்த கொடூர சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருந்து வந்தேன். இதனிடையே, எனக்கும், ஒரு இளைஞருக்கும் பழக்கத்தின் அடிப்படையில் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் காதலித்து வருவதை, தலைமை காவலர் அறிந்து கொண்டார். இதனால், அவர் என்னை கொடூரமாக தாக்கி காதலை கைவிடுமாறு வற்புறுத்தினார்.

தலைமை காவலர் மீது மகள் பாலியல் புகார்

ஆனால், நான் காதலை கைவிட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன். இருந்தாலும், என்னையும், எனது தாயையும் கொடூரமான முறையில் தலைமை காவலர் நடத்தி வருகிறார். இதனால், பொறுமை இழந்த நான் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்ற திருவள்ளூர் போலீசார் சம்பந்தப்பட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க: காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.. கொடூர செயலில் ஈடுபட்ட மனைவி உள்பட இருவர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் காவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தலைமை காவலர் ஒருவரே தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காவல் துறையில் 3- ஆவது சம்பவம்

ஏற்கனவே, சென்னையில் இரு வேறு சம்பவங்களில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு அதனை கலைத்து, திருமணம் செய்ய மறுத்ததாகவும் இரு வேறு ஆண் காவலர்கள் மீது சம்பந்தப்பட்ட பெண் காவலர்கள் தனித்தனியே புகார் அளித்திருந்தனர். இந்த விவகாரங்கள் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் காவலர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இலங்கையில் இதென்ன அநியாயம்.. தமிழக மீனவர்களின் படகுகள் உடைப்பு.. கடற்படையினர் அட்டூழியம்!

Follow Us