AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பூட்டிய வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்.. பீரோவை உடைத்து நகை- பணம் திருட்டு.. சென்னையில் பரபர சம்பவம்!

Chennai Crime : சென்னையில் பூட்டிய வீட்டில் புகுந்த மர்ம கும்பல் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்.. பீரோவை உடைத்து நகை- பணம் திருட்டு.. சென்னையில் பரபர சம்பவம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Sep 2026 10:22 AM IST

சென்னை மாவட்டம், ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது கரீம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கரீம் தனது குடும்பத்தினருடன் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கரீம் தனது குடும்பத்துடன் மீண்டும் ஐயப்பந்தாங்கலில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கரீம் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிமணிகள் சிதறி கிடந்தன.

25 பவுன் தங்க நகை- ரூ. 50 ஆயிரம் கொள்ளை

மேலும், பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே, இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு கரீம் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் படிக்க: திடீரென பெய்த மழை.. குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியா?

கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

இது தொடர்பாக கரீம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், மர்ம நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.

தடயங்கள் மூலம் போலீசார் விசாரணை

மேலும், கரீம் வீட்டு பகுதியில் சம்பவம் நடந்த நாட்களில் பதிவான செல்போன் சிக்னல்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக, தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்த தடையங்களில் சில விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வரும் ஐயப்பந்தாங்கலில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.. கொடூர செயலில் ஈடுபட்ட மனைவி உள்பட இருவர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Follow Us