AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மது பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இனி விரும்பும் மதுவை மனதார பருகலாம்.. டாஸ்மாக் போட்ட அதிரடி உத்தரவு!

TASMAC Introduced New Procedure : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் விரும்பம் மதுவை பெறுவதற்கு புதிய நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் வெளியிட்ட உத்தரவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

மது பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இனி விரும்பும் மதுவை மனதார பருகலாம்.. டாஸ்மாக் போட்ட அதிரடி உத்தரவு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 Sep 2026 11:28 AM IST

தமிழகம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் சுமார் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் உதவி சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆட்சி காலங்களில் 11 நிறுவனங்களிடம் இருந்து விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மதுபான வகைகளும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. தற்போது, தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நிலையில் அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் மதுபானம் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து வகை டாஸ்மாக் சில்லறை கடைகளுக்கும் விற்பனை செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

விரும்பும் மதுபானம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு

அதன்படி, இந்த புதிய நடைமுறை கடந்த ஜூலை மாதம் 20- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் விரும்பும் மது பானங்கள் கிடைக்கவில்லை எனவும், தட்டுப்பாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தீர்ப்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு மது பானங்கள் அனுப்பி வைக்கும் கொள்முதல் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.. கொடூர செயலில் ஈடுபட்ட மனைவி உள்பட இருவர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

விரும்பும் மதுவை பெற புதிய நடைமுறை

இதில், இன்று திங்கள் கிழமை ( செப்டம்பர் 21- ஆம் தேதி) முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள், டாஸ்மாக் சில்லறை கடைகளுக்கு தேவையான மதுபானங்களை கோரும் போது, அந்தந்த கடைகளில் உண்மையான மதுபானங்கள் என்னென்ன தேவை உள்ளது மற்றும் அவற்றின் கோரிக்கைகள் அடிப்படையில் மட்டுமே மதுபானங்கள் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவு

இதற்காக, கடந்த ஜூலை 20- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வந்த அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்து சரிபாதியாளர்கள் மது பானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கும் சமமாக பிரித்து வழங்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, டாஸ்மாக் சீனியர் மண்டல மேனேஜர், அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிட்டங்கி மேலாளர்கள் இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: பூட்டிய வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்.. பீரோவை உடைத்து நகை- பணம் திருட்டு.. சென்னையில் பரபர சம்பவம்!

Follow Us