AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் மீது தீ வைத்த நபர் – துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

Police Shoot Hospital Attack Accused : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தற்காலிக பெண் ஊழியரான ராஜேஸ்வரி மீது செப்டம்பர் 21, 2026 நேற்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் மீது தீ வைத்த நபர்  – துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Sep 2026 09:14 AM IST

திருவள்ளூர், செப்டம்பர் 22 :   திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தற்காலிக பெண் ஊழியரான ராஜேஸ்வரி மீது செப்டம்பர் 21, 2026 நேற்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 50 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தற்காலிக ஊழியர் ராஜேஸ்வரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பிரகாஷ் என்பவரை காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

சென்னைக்கு அருகே மாதவரத்தில் பதுங்கியிருந்த பிரகாஷை பிடிக்கச் சென்றபோது உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயற்சித்துள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக ஆய்வாளர் சிவக்குமார் சுட்டதில் காலில் காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : சாக்கடையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல்.. சேலத்தில் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியர் ஊழியராக பணியாற்றி வந்தவர் ராஜேஸ்வரி . இந்த நிலையில் இவர் வழக்கம்போல் செப்டம்பர் 2, 2026 நேற்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனைக்கு வந்த பிரகாஷ் என்பவர், திடீரென செவிலியர் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் இருந்த நிலையில் பிரகாஷின் செயல் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.

நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தபோதே இந்த துணிகர செயலில் அந்த நபர் ஈடுபட்டுள்ளார். மேலும், தீயை வைத்துவிட்டு அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். தற்போது 50 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ராஜேஸ்வரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :  Tamil Nadu Weather Alert: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – கனமழைக்கு வாய்ப்பு?

இந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் ராஜேஸ்வரி மீது தீ வைத்தவர் பிரகாஷ் என்பதும் அவர் பொன்னேரி சுடுகாட்டில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறைந்திருந்த பிரகாஷை பிடிக்க முயன்றபோது எஸ்.ஐ.தமிழரசனை அரிவாளால் வெட்டி வெட்டு தப்பியோட முயன்றுள்ளார்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்புக்காக துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டார். இதில் காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த, பிரகாஷை போலீசார் மீட்டு திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாள் வெட்டில் காயமடைந்த எஸ்.ஐ.-க்கு அதே மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Follow Us