சாக்கடையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல்.. சேலத்தில் பரபரப்பு!
Newborn Baby Found Dead in Drainage Canal In Salem | சேலத்தில் பெய்த கனமழை காரணமாக மக்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, அதில் பச்சிளம் குழந்தையின் சடலம் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேலம், செப்டம்பர் 22 : சேலத்தில் (Salem) சாக்கடையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், சாக்கடையில் இருந்து பச்சிளம் குழந்தையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை
சேலம் சுற்று வட்டார பகுதிகளில் செப்டம்பர் 20, 2026 இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்துள்ளது. செவ்வாய்பேட்டை, குகை பகுதிகளில் பெய்த மழையால் சாக்கடை கால்வாய் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. குறிப்பாக குகை லைன்ரோடு பகுதி மிகவும் தாழ்வாக உள்ளதன் காரணமாக, அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் தெருக்கலில் ஆறாக ஓடியுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : மதுராந்தகத்தில் ஆட்டோ ஓட்டி, டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்!




சாக்கடையை சுத்தம் செய்யும் பணியின்போது அதிர்ச்சி
கழிவுநீர் சாக்கடையை விட்டு வெளியேறி வீதிகளில் ஓடிய நிலையில், அந்த பகுதி மக்கள் சிலர் சாக்கடையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குப்பைகளை அள்ளிக்கொண்டு இருந்த நிலையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் அந்த சாக்கடையில் கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : 13 வயது சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வீரமணி வழக்கில் கைமாறிய ரூ. 10 கோடி.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ்
இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தை தொடர்ப்புக்கொண்டு இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளனர். தகவலின்படி, விரைந்துச் சென்ற போலீசார், பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டுள்ளனர். அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், குழந்தையை சாக்கடையில் வீசி சென்றது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.