AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Rain Alert: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது. இன்று (செப்.21) வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி? வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Sep 2026 14:43 PM IST

செப்டம்பர் 21, 2026: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை சென்றடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது. இன்று (செப்.21) வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: பெற்றோர்களே கவனம்! குழந்தைகளை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்: தப்புவது எப்படி?

செப்டம்பர் 27ஆம் தேதி வரை மழை தொடரும்:

நாளை (செப்.22) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழையும், செப்.23-ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். செப்.24-ல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்.25, 26-ல் வடக்கு உள் தமிழகத்திலும், செப்.27-ல் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செப்.21 முதல் 25 வரை வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மகளிருக்கான வெற்றி பயணம் திட்டம்.. எப்போது தொடங்குகிறது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு!

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். நாளை அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.

Follow Us