AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.50 கோடி மதிப்பிலான காசோலைகள் மோசடி முயற்சி? நடிகை அம்பிகா, சகோதரர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்

Actress Radha Complaint: கடந்த 17-ம் தேதி வங்கியிலிருந்து வந்த மின்னஞ்சலில், பழைய காசோலைகள் மூலம் அம்பிகா நாயர் பெயரில் பணம் பெற முயற்சி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதாக ராதா கூறியுள்ளார். ரூ.11 லட்சம், ரூ.13.17 கோடி, ரூ.27.73 கோடி, ரூ.7 கோடி மற்றும் ரூ.1.79 கோடி என ஐந்து காசோலைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50.8 கோடிக்கும் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

ரூ.50 கோடி மதிப்பிலான காசோலைகள் மோசடி முயற்சி? நடிகை அம்பிகா, சகோதரர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Sep 2026 16:02 PM IST

செப்டம்பர் 21, 2026: தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனன் நாயர் என்ற அர்ஜுன் நாயர் ஆகியோர், தனது அறையில் இருந்த கையொப்பமிட்ட வெற்றுக் காசோலைகளைத் திருடி, சுமார் ரூ.50.8 கோடி மதிப்பிலான பணத்தை மோசடியாகப் பெற முயன்றதாக நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா இருவரும் 1980-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த சகோதரிகள். அம்பிகா ‘அந்த ஏழு நாட்கள்’, ‘சகலகலா வல்லவன்’, ‘வாழ்க்கை’, ‘மிஸ்டர் பாரத்’, ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ராதா, இயக்குநர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, ‘முதல் மரியாதை’, ‘தூரல் நின்னு போச்சு’, ‘பாயும் புலி’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் ‘வெள்ளை ரோஜா’, ‘எங்க முதலாளி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பழைய காசோலைகள் மூலம் பணம் பெற முயற்சி?

ராதா அளித்துள்ள புகாரில், சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் தாம், தொழில் மற்றும் சொந்த காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது, வணிகச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக தனது அறையில் 5 அல்லது 6 கையொப்பமிட்ட வெற்றுக் காசோலைகளை வைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: வரலாற்றுப் பொக்கிஷம்.. திருப்பத்தூர் அருகே ஏரியூர் மலையில் 700 ஆண்டுகள் பழமையான அரிதான கல்வெட்டு கண்டெடுப்பு!

‘ஏ.ஆர்.எஸ். கார்டன் ஸ்டுடியோ’ நிறுவனம் 2025 ஜனவரி 7-ல் ‘ஆர்.ஆர். கார்டன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஜனவரி 22 முதல் புதிய காசோலைப் புத்தகம் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் பழைய காசோலைகள் செல்லாதவையாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.50.8 கோடி மதிப்பிலான காசோலைகள்

கடந்த 17-ம் தேதி வங்கியிலிருந்து வந்த மின்னஞ்சலில், பழைய காசோலைகள் மூலம் அம்பிகா நாயர் பெயரில் பணம் பெற முயற்சி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதாக ராதா கூறியுள்ளார். ரூ.11 லட்சம், ரூ.13.17 கோடி, ரூ.27.73 கோடி, ரூ.7 கோடி மற்றும் ரூ.1.79 கோடி என ஐந்து காசோலைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50.8 கோடிக்கும் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வங்கியைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனையை நிறுத்துமாறு ராதா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், காசோலைகளில் உள்ள விவரங்கள் தனது சகோதரர் அர்ஜுன் நாயரின் கையெழுத்தில் நிரப்பப்பட்டிருந்ததாக வங்கி விசாரணையில் தெரியவந்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: மகளிருக்கான வெற்றி பயணம் திட்டம்.. எப்போது தொடங்குகிறது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு!

தனது அனுமதியின்றி அறைக்குள் நுழைந்து காசோலைகளை எடுத்துச் சென்று பணத்தைப் பெற முயன்றதாகவும், தங்கம், வைரம் மற்றும் சொத்து ஆவணங்களைச் சரிபார்க்கவும் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் ராதா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us