Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. நீலகிரி, கொடையில் தொடரும் உறைபனி.. நிலவரம் என்ன?

Tamil Nadu Weather Update: டிசம்பர் 28 முதல் 30 வரை தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. நீலகிரி, கொடையில் தொடரும் உறைபனி.. நிலவரம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Dec 2025 06:15 AM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 25, 2025: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், டிசம்பர் 25, 2025 தேதியான இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதிப் ஜான் தெரிவித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, தென்கிழக்கு அரபிக்கடலும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 25 தேதியான இன்று வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும்:

அதே சமயத்தில், வரக்கூடிய டிசம்பர் 26 மற்றும் 27, 2025 தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் மட்டும் பனிமூட்டம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 28 முதல் 30 வரை தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பழைய பேனா பகடி செய்து சிரிக்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் பதில்

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்:


இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதிப் ஜான், வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு குளிர்ந்த வானிலை தொடர்ந்து இருக்கும் என்றும், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில், குன்னூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ், வால்பாறையில் 8.3 டிகிரி செல்சியஸ், ஊட்டியில் 8.4 டிகிரி செல்சியஸ், ஏற்காட்டில் 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.