Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழைய பேனா பகடி செய்து சிரிக்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் பதில்

TVK Vijay : அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும் என தன் கட்சித் தொண்டர்களுக்கு உத்ரவிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

பழைய பேனா பகடி செய்து சிரிக்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் பதில்
விஜய் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Dec 2025 20:32 PM IST

சென்னை, டிசம்பர் 24: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) டிசம்பர் 23, 2025 அன்று மீதமுள்ள மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.  இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா, தகுதியற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், கட்சிக்காக உழைத்த தனக்கு உழைத்த தனக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது விஜய்யின் வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜய், வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும் எனவும், உறுதியாகவில்லை எனில் அவர்களின் வாக்குரிமை உறுதியாக, நம் கழகத் தோழர்கள் விரைந்து உதவிட வேண்டும் என தனது கட்சித் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை புதிய அடிமை என விமர்சித்த நிலையில் அதற்கு தனது அறிக்கையில் பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணியில் இணைகிறதா அமமுக? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்!

‘முரசொலி முரணொலியாக மாறியது’

இது தொடர்பாக அவர் அவர் தனது அறிக்கையில்,  நம்மை முடக்க நினைத்தவர்கள், மக்கள் நம்முடன் முன்னைவிட அதிகமாக, அதீதப் பாசத்துடன் ஆணித்தரமாக அணிவகுத்து நிற்பதைப் பார்த்து விழிபிதுங்கி தங்கள் மூளைத்தறி முடங்கி முனகத் தொடங்கினர். நமக்கு எதிராகத் தலையங்கம் என்ற பெயரில் பிழையங்கம் எழுதியதும் அவர்கள்தான். நம்மால் கூட்டம் சேர்க்க இயலாது என்று எழுதிய அவர்களே கூட்டம் சேருகிறது என்றும் எழுதினர். முரசொலியாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் எழுதியது முரணொலியாக மாறிப் போனது. இதைப் பார்த்து, பரணில் கிடக்கும் அவர்களின் பழைய பேனா பகடி செய்து சிரிக்கிறதாம்.

விஜய் வெளியிட்ட அறிக்கை

 

இதையும் படிக்க : அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை.. கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க இபிஎஸ் ஒப்புதல்?

தாங்கள் தெரிந்தே இட்ட கையெழுத்தையே தெரியாமல் இட்டுவிட்டதாகத் தகிடுதத்தம் செய்த முரண்களின் முன்னேற்றக் கழகத்தினர், நம்மீது அவதூறு பூசலாம் என்ற நப்பாசையில், தங்கள் முகமூடியைத் தாங்களே கழற்றிக்கொண்டனர். ஆம். அவர்கள் கட்சியின் தலைவரான முதல்வரே பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாகப் பேசி, யார் மீதோ கல்லெறிவதாக எண்ணிக் களிப்புறுகின்றார். பாவம் அவர்கள், தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்புதான் நின்று பேசுகிறோம் என்பதை ஏனோ மறந்துவிட்டனர் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.