Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு உறுதி.. எவ்வளவு கிடைக்க வாய்ப்பு?

Pongal cash gift confirmed: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.5000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஏற்கெனவே, சட்டமன்ற தேர்தலும் நெருங்கி வருவதால், தமிழக அரசு எவ்வளவு தொகை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு உறுதி.. எவ்வளவு கிடைக்க வாய்ப்பு?
பொங்கலுக்கு ரொக்கப்பணம் உறுதி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Dec 2025 12:01 PM IST

தமிழகத்தில் இந்தாண்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களின் முக்கிய பண்பாட்டு விழாவான பொங்கலை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. அதேசமயம், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணமும் சில வருடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி, வரவிருக்கும் பொங்கலுக்கும் ரொக்கப்பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த 2021 தேர்தல் காலத்தில் அதிமுக அரசு ரூ.2,500 வழங்கியது. எனவே இந்த முறை அதைவிட அதிகம் வழங்கப்படலாம் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிக்க: ஹேப்பி நியூஸ்! பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி சேலை எப்போது? அமைச்சர் மகிழ்ச்சியான தகவல்

திமுக ஆட்சியில் ரொக்கப்பணம்:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022ஆம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டும் இதேபோன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டாலும், ரொக்கப்பணம் சில பிரிவினருக்கு வழங்கப்படவில்லை. அதாவது, மத்திய – மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை. அதேபோல், 2025ல் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

ரொக்கத்தொகை ரூ.3,000-மா? ரூ.5,000-மா?

இந்நிலையில், வரும் 2026 பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளது. அதோடு, ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அது ரூ.1000-மா? ரூ.2,000-மா அல்லது ரூ.3,000-மா என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கப்பட்சத்தில் தான் தெரியவரும். எனினும், ரொக்கப்பணம் வழங்குவது உறுதியாகியுள்ளது.

முன்னதாக, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.5000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதன் மூலம், தமிழக அரசு எவ்வளவு தொகை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தேர்தல் நெருங்குவதால், ரொக்கம்?

அதேசயம், ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், இந்த ரொக்கப்பரிசுக்கு மக்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனெனில், 2021 தேர்தல் காலத்தில் அதிமுக அரசு ரூ.2,500 வழங்கியது. எனவே இந்த முறை அதைவிட அதிகம் வழங்கப்படலாம் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தற்போது தமிழகத்தில் 2 கோடி 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுக்கு தலா ரூ.3,000 வழங்கப்பட்டால் ரூ.6,817 கோடியும், தலா ரூ.5,000 வழங்கப்பட்டால் ரூ.11,361 கோடியும் அரசுக்கு செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்.. அமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டம்..

அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை:

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் உறுதியாகச் சொல்லுகின்றன. இதற்கான டோக்கன் விநியோகம், பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதி போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இதனிடையே, பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. அதில், பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுப்பது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.