Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்.. அமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டம்..

DMK Youth Wing Meet: அண்மையில் திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் டிசம்பர் 23, 2025 தேதியான இன்று மாலை நடைபெற இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்.. அமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Dec 2025 07:23 AM IST

சென்னை, டிசம்பர் 23, 2025: திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் டிசம்பர் 23, 2025 தேதியான இன்று மாலை நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சூழலில், அரசியல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக ஆகிய நான்கு கட்சிகள் இதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆளும் திமுக அரசு தரப்பில் தேர்தல் பணிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களான எ.வ. வேலு, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: அரையாண்டு விடுமுறை.. ஜன. 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..

சென்னையில் இன்று நடக்கும் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்:

திமுகவைப் பொறுத்தவரையில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்குடன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், டிசம்பர் 23, 2025 தேதியான இன்று இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக இளைஞரணியில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (23ஆம் தேதி) மாலை 4 மணியளவில், மாநில துணைச் செயலாளர் முன்னிலையில்,

மேலும் படிக்க: 27 ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும்.. உதகையில் உறைபனி தொடரும் – வானிலை எப்படி இருக்கும்?

அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள குறுஞ்சி இல்லத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இளைஞரணியின் அமைப்புப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்க திட்டம்:

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக வரக்கூடிய தேர்தலில் இளைஞரணியின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், களப்பணியில் ஈடுபடும் இளைஞரணி நிர்வாகிகள் மேலும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதையும், எந்தெந்த தொகுதிகள் பலவீனமாக உள்ளன, அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன, எந்தெந்த தொகுதிகள் சாதகமாக உள்ளன, தெருமுனைப் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.