AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்யின் சேலம் பரப்புரையின்போது ஒருவர் பலி – மஹாராஷ்டிரா நபருக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி?

TVK Rally Tragedy: சேலத்தில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  கிட்டத்தட்ட 3 மணிநேரம் வெயிலில் நின்றிருந்ததால் மயக்கமடைந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜய்யின் சேலம் பரப்புரையின்போது ஒருவர் பலி –  மஹாராஷ்டிரா நபருக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி?
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Feb 2026 16:06 PM IST

சேலம், பிப்ரவரி 11 : சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் (Vijay) பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வெள்ளிப் பட்டறை தொழிலாளி சூரஜ் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  கிட்டத்தட்ட 3 மணிநேரம் வெயிலில் நின்றிருந்ததால் மயக்கமடைந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதாகும் சூரஜ் சேலத்தில் வெள்ளிப் பட்டறையில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது மரணம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலத்தில் விஜய்யின் பரப்புரையின் போது ஒருவர் பலி

சேலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பாஸ் வழங்கப்பட்ட 5000 பேருக்கும் மட்டுமே அனுமதி என்றும் நிர்வாகிகள் கூட்டம் என்பதால் பொதுமக்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்க்குமாறும் தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் சூரஜ் என்ற வெள்ளிப்பட்டறை தொழிலாளி திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயரிழந்தார்.

இதையும் படிக்க : திருச்சிக்கு அருகே “குட்டி ஊட்டியா”…பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா தளம்..வெறும் 3 மணி நேர பயணம் தான்!

மஹாராஷ்டிரா நபருக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி?

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நின்றதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  இறந்த சூரஜ் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநில நபருக்கு தவெக நிர்வாகிகள் சந்திப்பில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மரணமடைந்த நபர் தொடர்பான பதிவு

 

இதையும் படிக்க : சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் புறப்பட்டார் விஜய்…தேர்தல் பரப்புரையை தொடங்க இருப்பதாக திட்டம்?

தற்போது மேலும் நிர்வாகிகளுக்கு தண்ணீர் கூட முறையாக வழங்கவில்லை என்றும் தொண்டர்களுக்கு இருக்கைகள் கூட இல்லை என்றும்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் மாலை நேரங்களில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தால் ஒருவரின் உயிர் பறிபோயிருக்காது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது மரணம் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் கூட்டத்தில் சிலர் மயங்கி விழுந்தபோதும் விஜய் அது தெரியாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. நாற்காலிகள் கூட போடப்படாததால் நீண்ட நேரமாக வெயிலில் நின்றபடி இருந்ததன் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Follow Us