மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!
Magalir urimai thogai Rs5000 credited: பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000ம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000ம் என மொத்தம் ரூ.5,000 வழங்கப்படுள்ளது. 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, பிப்ரவரி 13: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.5000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்த்தார்கள். அதனால், நமது நமது திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!
வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு:
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச்,… pic.twitter.com/n7VrMqcrb7
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 13, 2026
அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000ம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000ம் என மொத்தம் ரூ.5,000 வழங்கப்படுள்ளது. 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அந்த வீடியோவில், “இன்றைக்கு காலை தமிழக அரசு சார்பில் ரூ. 5000 வரவு வைக்கப்பட்டிருக்கும். எதற்காக இந்தப் பணம்? கொரோனா உச்சத்தில் இருந்தபோது ரூ. 4000 வழங்கினோம். ஆட்சிக்கு வருவதற்கு முன் மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அதன்படி, 1.31 குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்.
உரிமைத் தொகையை நிறுத்த சதி:
மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்றுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தை மேம்படுத்த நாம் நினைத்தால், டெல்லியில் இருக்க கூடிய கூட்டமும், தமிழ்நாட்டில் அடிமையாக இருக்கக்கூடிய ஒரு கூட்டமும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி, அடுத்த 3 மாதத்திற்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த சதி செய்வதாக தகவல் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர சிலர் முயற்சி செய்கிறார்கள்.
இதையும் படிக்க : பைக்கில் புகுந்த பாம்பு..வழக்கறிஞர் செய்த சிம்பிலான செயல்..திருச்சியில் சுவாரஸ்ய நிகழ்வு!
திட்டத்தை நிறுத்தினால் பெண்களுக்கு சிரமம்:
இந்த திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் பெண்களுக்கு எவ்வளவு சிரமம் என்பதை அறிவேன். எனவே தான் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000, கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 சேர்த்து ரூ.5000ஆக வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.