AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பைக்கில் புகுந்த பாம்பு..வழக்கறிஞர் செய்த சிம்பிலான செயல்..திருச்சியில் சுவாரஸ்ய நிகழ்வு!

Trichy Court Snake : திருச்சி நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு நுழைவதை பார்த்த வழக்கறிஞர் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேப்பரில் குறிப்பிட்ட வார்த்தைகளால் யாரும் பாம்பு கடிக்கு ஆளாகாமல் தப்பித்துள்ளனர் .

பைக்கில் புகுந்த பாம்பு..வழக்கறிஞர் செய்த சிம்பிலான செயல்..திருச்சியில் சுவாரஸ்ய நிகழ்வு!
திருச்சி நீதிமன்றத்தில் பைக்கில் புகுந்த பாம்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Feb 2026 11:38 AM IST

திருச்சி நீதிமன்றத்தில் தினந்தோறும் வழக்குகள் தொடர்பாக வழக்கறிஞர்கள், பொதுமக்கள், போலீசார் உள்ளிட்ட பல தரப்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால், திருச்சி நீதிமன்றம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இவ்வாறு, நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது வாகனங்களை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்திருப்பார்கள். அதன்படி, நேற்று புதன்கிழமை ( பிப்ரவரி 11) வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சக வழக்கறிஞர் ஒருவரின் ஸ்கூட்டியில் பாம்பு ஒன்று உள்ளே நுழைவதை அங்கு நின்று கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவர் பார்த்தார். உடனே, இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்த ஸ்கூட்டியின் அருகில் யாராவது சென்றால் பாம்பு கடிக்கு ஆளாக நேரிடும் என்று எண்ணிய அவர் ஒரு சுவாரஸ்யமான செயலை செய்தார்.

பாம்பு குறித்து பேப்பரில் எழுதிய வழக்கறிஞர்

அதன்படி, ஒரு பேப்பரில் 10. 2.26 என தேதியிட்டு 11:30 AM என நேரத்தையும் குறிப்பிட்டு, அதில் இந்த வண்டியின் உள்ளே பாம்பு உள்ளது எனவும் வண்டின் எண்: TN 45 CE 1870 என்று எழுதி ஸ்கூட்டியின் சீட்டின் மேல் வைத்து பேப்பர் காற்றில் பறக்காமல் இருக்க ஒரு கல்லையும் வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால், அந்த வழியாக சென்றவர்கள் அந்த பைக்கில் பாம்பு இருப்பதை அறிந்து கொண்டு அந்த வாகனத்தின் அருகே செல்லாமல் இருந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் கூட்டம் கூடியது.

மேலும் படிக்க: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய நடைமுறை..ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!

பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் பகுதியில் மறைந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்து வெளியேற்றின்ர். பின்னர், அந்த பாம்பை சாக்குப் பையில் போட்டு கட்டி அங்கிருந்து எடுத்துச் சென்று பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். தமிழகத்தில் இது போன்ற பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாம்புகள் புகுந்து விட்டால் அதனை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

பாம்பு பிடிப்பதற்கு நாகம் செயலி

மேலும், பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாம்புகள் புகுந்து விட்டால் அந்த பாம்புகளை பாதுகாப்பான முறையில் கையாளுவதற்கு வனத்துறை சார்பில் நாகம் செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் முறையிட்டால் அரசால் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாம்பு பிடிக்கும் நபர்கள் அல்லது வனத்துறை, தீயணைப்பு துறை ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பாம்புகளை பாதுகாப்பான முறையில் பிடித்து செல்வார்கள் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார்.. சென்னையில் நூதன மோசடியில் ஈடுபட்ட தம்பதி..

Follow Us