AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலர் தினம்…22 வகையான ரோஜா பூக்கள் சாகுபடி..ஆன்லைனில் ரோஜா பூக்கள் விற்பனை படு ஜோர்!

Valentine Day: காதலர் தினத்தையொட்டி, ஒசூரில் 22 வகையான ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் மலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர் .

காதலர் தினம்…22 வகையான ரோஜா பூக்கள் சாகுபடி..ஆன்லைனில் ரோஜா பூக்கள் விற்பனை படு ஜோர்!
ஒசூர் ரோஜா பூக்கள் ஆன்லைன் மூலம் விற்பனை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Feb 2026 07:12 AM IST

உலகம் முழுவதும் நாளை மறுநாள் சனிக்கிழமை ( பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, காதலர்கள் தயாராகி வருகின்றனர். இதே போல, காதலர் தினத்தையொட்டி, ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், பரிசுப் பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் உணவகங்கள், கபே ஆகியவை தயாராகி வருகின்றன. இதனிடையே, காதலர் தினத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரோஜா பூக்கள் விற்பனையும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படும் இடம் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் ஒன்றான ஓசூரில் ரோஜா பூக்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, ஓசூர், பாகலூர், கெலமங்கலம், பேரிகை, தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதாலும், மண்வளம் காரணமாகவும் அதிக அளவு ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

22 வகையான ரோஜா பூக்கள் விற்பனை

அதன்படி, ஓசூர் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு விவசாயிகள் ரோஜா பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில், கோல்ட் ஸ்டிரைக், தாஜ்மஹால் (சிவப்பு), பெர்னியர், நோப்ளாஸ், சவரன், அவலாஞ்சி உள்ளிட்ட 22 வகையான ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் ரோஜா பூக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில், காதலர் தினம், புத்தாண்டு தினம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, அதிக அளவிலான ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ஒரே சிரிப்பில் பேமஸ்.. லாரி கிளீனர் டூ பிரபலம்.. யார் இந்த சிரிப்பு சிறுவன்?

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான ஒசூர் ரோஜா

இதில், குறிப்பாக தாஜ்மஹால், அவலாஞ்சி ஆகிய ரோஜா பூக்கள் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வெளி நாடுகளில் வேறு விதமான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், ஓசூர் ரோஜா பூக்களுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. மேலும், விமான கட்டணம் அதிகரித்ததன் காரணமாகவும் விவசாயிகள் ரோஜா பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்வரவில்லை. இந்த நிலையில், ஓசூர் ரோஜா பூக்களுக்கு புதுடெல்லி, ஜெய்ப்பூர், கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆன்லைன் மூலம் 10 லட்சம் ரோஜா மலர்கள் விற்பனை

அதன்படி, இந்த மாநிலங்களுக்கு ஓசூர் ரோஜா பூக்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால், ஆன்லைன் வழியாக சுமார் 10 லட்சம் ரோஜா பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இணைய வழியாக ஓசூர் ரோஜா பூக்களுக்கு முன்பதிவு செய்தால், அதன் அடிப்படையில், ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் பேக் செய்யப்பட்டு பாதுகாப்பான முறையில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: Viral Video : சன் கேண்டில்.. சூரிய ஒளியில் மின்னிய பனி துகல்கள்.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வீடியோ!

Follow Us