AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ரயிலில் சான்வெட்ச் செய்த குடும்பம்.. இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

A Group of Women Making Sandwich On Train | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சில பெண்கள் ரயிலில் சான்வெட்ச் செய்து சாப்பிடும் வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Viral Video : ரயிலில் சான்வெட்ச் செய்த குடும்பம்.. இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Feb 2026 21:55 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இந்த உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குடும்பம் ஒன்று ரயிலில் சான்வெட்ச் செய்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பல விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் சான்வெட்ச் செய்த குடும்பம்

இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள போக்குவரத்து என்றால் அது ரயில் போக்குவரத்து தான். குறைந்த விலையில் அதிக தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்வர். இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்யும் நிலையில், ரயிலில் செய்யக் கூடிய மற்றும் செய்யக்கூடாதவை என சில உள்ளன. ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் அந்த விதிகளை பின்பற்றுவதில்லை. அவ்வாறு விதிகளை மீறி பயணிகள் செய்யும் சில செயல்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான் தற்போது அந்த குடும்பம் சான்வெட்ச் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : முதுகில் பெரிய மூட்டையை சுமந்துக்கொண்டு 6 மாடி ஏறிய டெலிவரி ஊழியர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சில பெண்கள் வரிசையாக அமர்ந்துக்கொண்டு அவர்கள் தாங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த காய்கறிகள், பிரெட் துண்டுகளை வைத்து சான்வெட்ச் செய்கின்றனர். வீடுகளில் அமர்ந்து காய்கறி நறுக்குவதை போல வெள்ளறிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை அவர்கள் ரயிலுக்குள்ளாவே வெட்டி போடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us