இனிமேல் மேகங்களுக்கு நடுவே பறக்கலாம்.. கொடைக்கானல் ரோப் கார் திட்டத்தில் வந்த அதிரடி அப்டேட்!
Kodaikanal Rope Car Project: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட இருக்கும் ரோப் கார் சேவையின் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முயற்சிகளை சுற்றுலாத்துறை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்களின் விரைவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் உயர்மட்ட போக்குவரத்து அமைப்பு ( ரோப் கார்) அமைப்பதற்கு சுற்றுலாத்துறை திட்டமிட்டது. அதன்படி, கொடைக்கானலில் ரோப் கார் அமைப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக திறந்த டெண்டர் அடிப்படையில் ரூ.79 லட்சம் மதிப்பில் வாப்காஸ் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் ரோப் கார் அமைக்கும் பணி
இந்த ஆய்வு பணியின் ஒரு பகுதியாக ரோப் கார் திட்டம் தொடர்பான முதன்மை மற்றும் 2- ஆம் நிலை தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோப் கார் அமைப்பதற்காக முன்முடியப்பட்ட வழித்தடத்தில் போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன், உதவி மேனேஜர் ராஜா சுப்பிரமணியம் ஆகியோர் கும்பக்கரை அருவி அருகே ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, ரோப்வே நிலையம் அமைப்பதற்கான இடங்களையும் பார்வையிட்டனர்.
மேலும் படிக்க: தகறாறு செய்த போதை ஆசாமி – தட்டிக்கேட்ட இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்




ரோப் கார் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு
இந்த விரிவான சாத்தியக்கூறு ஆய்வு வருகிற செப்டம்பர் மாதம் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வரும் மகாபலிபுரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய இரு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுலா தளங்களை சுற்றி பார்ப்பதற்காகவும், அவர்களை கவர்வதற்காகவும் ரோப்வே கார் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு செய்தது.
இரு வழித்தடங்களில் ரோப் கார் சேவை
அதன் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. அதன்படி, கொடைக்கானலில் பட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவு மற்றும் பழனி முதல் கொடைக்கானல் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவு என இரு வழித்தடங்களில் ரோப் கார் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!