Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Tourism

Tourism

இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் மரபுகளுடன் கூடிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது. இத்தகைய இந்திய நிலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பல இயற்கை சுற்றுலா தலங்கள் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயற்கையாக அமைந்த பல சுற்றுலா தலங்கள் இன்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 1 கோடி சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 கோடியை தாண்டுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். உள்நாட்டு பயணத்தை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகத்தால் கடந்த 2023ம் ஆண்டு ‘விசிட் இந்தியா இயர்’ என அறிவிக்கப்பட்டது. உலக பொருளாதார மன்றத்தின் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024ல் இந்தியாவின் தரவரிசை 39 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா துறை 7% பங்களிப்பை தருகிறது. நாம் இந்த தொகுப்பில் உள்ளூர், வெளிமாநிலங்களில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றி காணலாம்.

Read More

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு: ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து!

Rameswaram train cancel: சத்திரக்குடி பகுதியில் நடைப்பெறும் பராமரிப்பு பணிக்காக ராமேஸ்வரத்திற்கு பகல் நேர ரயில்கள் 2025 ஜூலை 1 முதல் ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வர–மதுரை மற்றும் ராமேஸ்வர–திருச்சி ரயில்கள் வார இறுதி மற்றும் ஆடி அமாவாசை தவிர மற்ற நாட்களில் இயங்காது. 2025 ஜூலை 4 முதல் வாரந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஈரோடு: ரூ. 5 போதும்… நாள் முழுக்க கொடிவேரி அணையில் கொண்டாடலாம்…

Explore Kodiveri Dam: கோபி அருகிலுள்ள கொடிவேரி அணை, ஈரோட்டின் பிரபல சுற்றுலாத் தலமாக வளர்ந்து வருகிறது. ரூ.5 என்ற குறைந்த கட்டணத்தில், அழகிய அருவி, மணல் பரப்பு, சிறுவர் பூங்கா என பல்வேறு வசதிகளை அனுபவிக்கலாம். 2025 ஏப்ரல்-மே மாதங்களில் 3 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். குறைந்த செலவில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் இடம் இது.

கர்நாடகா: நந்தி மலைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை.. காரணம் என்ன?

Karnataka Bans Tourist Entry to Nandi Hills: கர்நாடகாவின் நந்தி மலைக்கு 2025 ஜூன் 30 முதல் ஜூலை 3 வரை சுற்றுலாப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 2-ஆம் தேதி அங்கு நடைபெறும் மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 அழகிய ரயில்வே பாலங்கள்..!

India's Top 5 Stunning Railway Bridges: இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்று. இந்தக் கட்டுரையில், பம்பன், செனாப், ஜார்ஜ், மண்டோவி, டிரம்பட் போன்ற 5 அற்புத ரயில் பாலங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அவை எங்கே அமைந்துள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

சுற்றுலாத்தளமாக மாறுமா அழகன் குளம்..? 13,000 பழங்காலப்பொருட்கள் கண்டெடுப்பு

Azhagankulam Museum Row: ராமநாதபுரம் அழகன் குளத்தில் 30 ஆண்டு அகழ்வாய்வில் 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அங்கு நாவாய் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் அழகன் குளத்திலேயே அமைய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

சுற்றுலாத்தலமாக மாறுமா கூமாபட்டி..? வைரல் இளைஞரின் கோரிக்கை

Koomapatty Viral Video: கூமாபட்டி பற்றி இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிளவக்கல் அணை உள்ளிட்ட இயற்கை இடங்களை சுற்றுலா தலமாக மாற்ற தமிழக அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். பாதுகாப்பு காரணமாக அணை பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

யாரும் கூமாப்பட்டி போகாதீங்க.. முடிவுக்கு வந்த ட்ரெண்டிங்.. என்ன காரணம்?

சமூக வலைத்தளங்களில் வைரலான கூமாப்பட்டி கிராமம், அதன் அழகிய இயற்கை எழில் காரணமாக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது. இதனால், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதிக்கு மக்கள் செல்ல தடை உள்ளதாகவும், அணைப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Koomapatti: ட்ரெண்டாகும் கூமாப்பட்டி.. அந்த ஊர் எங்கிருக்கு தெரியுமா?

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கூமாப்பட்டி, தென் மாவட்டங்களில் ஒன்றில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமாகும். பிளவாக்கல் அணைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது அமைதியான இயற்கை எழிலை கொண்டது. இந்த கிராமத்தின் அழகு, சுற்றுலா பயணிகளை கவர ஆரம்பித்துள்ளது. இணையத்தில் கூமாபட்டி எங்குள்ளது என்பது ட்ரெண்டாகியுள்ளது.

குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் விரக்தி

Courtallam Waterfalls Closed: கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. . இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

திண்டுக்கல்லில் பார்க்க வேண்டிய பல இடங்கள் – அறியப்படாத சுற்றுலாத் தலம்…

Dindigul Tourism: வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகள், ஆன்மிகத் தலங்கள் என திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அற்புதமான பயண அனுபவத்தை வழங்குகிறது. மதுரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பலருக்கு அறியப்படாத ஏராளமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்களை இங்கு காணலாம்.

பாபநாசம்: காசு வாங்குறாங்க… ஆனால் முக்கிய வசதி இல்லை: சுற்றுலாப்பயணிகள் குற்றச்சாட்டு

Agathiyar Falls Road: திருநெல்வேலி பாபநாசம் அருகே உள்ள அகத்தியர் அருவிக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமம் அனுபவிக்கின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சாலை சீரமைப்பு நடைபெறவில்லை. கட்டணம் வசூலிக்கும் வனத்துறை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்: சூறாவளி காற்றால் படகு சேவை தற்காலிக நிறுத்தம்..!

Kodaikanal Storm Issue: கொடைக்கானலில் சமீபத்திய சூறாவளி காற்று காரணமாக நட்சத்திர ஏரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் தடை மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூம்பாறை, மன்னவனூர் போன்ற பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிகப் பயணம்: செல்வது எப்படி?

Free Tamil Nadu Temple Pilgrimage: தமிழ்நாடு அரசு, ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிகப் பயணத்தை அறிவித்துள்ளது. 2025 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் இந்தப் பயணத்தில் 60-70 வயதுக்குட்பட்ட, ரூ.2 லட்சம் வருமானம் உள்ள இந்துக்கள் பங்கேற்கலாம். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

குற்றாலத்தில் களைகட்டும் சீசன்: அருவிகளில் குவியும் சுற்றுலாப்பயணிகள்… சாரல் திருவிழா எப்போது?

Courtallam Tourists: குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தந்துள்ளனர். விடுமுறை நாளான 2025 ஜூன் 22 இன்று மக்கள் அருவிகளில் குளித்து, சுற்றுலா பகுதிகளில் நேரம் கழித்தனர். தற்போதைய சீசன் முன்னதாக துவங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச யோகா தினம்: மாமல்லபுரத்தை இன்று இலவசமாக சுற்றி பார்க்கலாம்.. தொல்லியல்துறை

Mamallapuram Free Entry: ஜூன் 21, சர்வதேச யோகா தினத்தையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இலவசமாகப் பார்வையிட இது ஒரு அரிய வாய்ப்பு.