AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டம் நடத்துவதில் சிக்கல்.. தவெகவினர் மனு நிராகரிப்பு

மேலும், 30,000 பேர் கூட தகுதியான இடம் தானா? என்று பொதுப்பணித்துறை சான்று அளிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்படி மனு தாக்கல் செய்தால், அவர்கள் கேட்ட தேதியில் அனுமதி கொடுக்கப்படும். இதனால் அவர்கள் திற்போது கொடுத்த மனுவை நிராகரித்து அவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டம் நடத்துவதில் சிக்கல்.. தவெகவினர் மனு நிராகரிப்பு
விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Feb 2026 12:34 PM IST

சேலம், பிப்ரவரி 06: சேலத்தில் விஜய் மக்கள் பிரசார கூட்டத்திற்கு அனுமதி கோரிய தவெகவினின் மனுவை நிராகரித்த போலீசார், அரச வழிகாட்டுதல்படி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் சார்பில், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஈரோட்டை தொடர்ந்து,சேலத்தில் நடத்த அக்கட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, பிப்.13ம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 3ம் தேதி இரவு சேலம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர். இதனிடையே, சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று முன்தினம் சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரியை சந்தித்தனர்.

மேலும் படிக்க: விமான பயணிகளுக்கு குட் நியூஸ்…சென்னை டூ திருச்சி-மதுரைக்கு சிறிய ரக விமான சேவை தொடக்கம்!

தவெகவினர் மனு நிராகரிப்பு:

அப்போது சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து தாளமுத்து நடராஜன் திடலில் போலீசார் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் விஜய்யின் மக்கள் பிரசாரத்திற்கு தாக்கல் செய்த மனுவில் அரசு வழிகாட்டுதல்படி மனு தாக்கல் செய்யவில்லை. எனவே கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபனிடம் அவர் கொடுத்த மனுவை போலீசார் திரும்ப கொடுத்து உள்ளனர். இதனால், பிரசார கூட்டத்திற்கு தவெகவினர் தற்போது வழங்கிய மனுக்களை போலீசார் நிராகரித்துள்ளனர்.

அரசு வழிகாட்டுதல்படி மனு தாக்கல் செய்யவில்லை:

இது குறித்து காவல் ஆணையர் அனில்குமார் கிரி கூறும்போது, விஜய் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டத்திற்கு தவெகவினர் அரசு வழி காட்டுதல்படி மனு தாக்கல் செய்யவில்லை. உதாரணத்திற்கு அவர்கள் பிரசாரம் செய்யும் இடத்தில் 5,000 பேர் கூடுவார்கள் என்றால் 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் 30,000 பேர் கூடுவார்கள் என்றால் மனு கொடுத்துவிட்டு, அதற்கு மேல் மக்கள் கூடுவார்கள் என்றால் அதற்கு என்ன வழி வகை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் மனுவில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேலும், 30,000 பேர் கூட தகுதியான இடம் தானா? என்று பொதுப்பணித்துறை சான்று அளிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்படி மனு தாக்கல் செய்தால், அவர்கள் கேட்ட தேதியில் அனுமதி கொடுக்கப்படும். இதனால் அவர்கள் திற்போது கொடுத்த மனுவை நிராகரித்து அவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!

விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சிக்கல்:

விஜய் மக்கள் பிரசார கூட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு திரும்ப வழங்கப்பட்டதால், விஜய் மக்கள் பிரசார கூட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தவெகவினர் மாற்று இடம் தேட உள்ளனரா? அல்லது மனுவை மாற்றி மீண்டும் அதே இடத்தில் பிரசார கூட்டம் நடத்த திட்டமிட உள்ளனரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் 10 நாட்களுக்கு முன்னதாக மனு அளிக்க வேண்டும். விஜய்

 

Follow Us