Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புனித ஸ்தலங்களுக்கு போறீங்களா? தமிழக அரசு ரூ.10000 அறிவிப்பு…

Tamil Nadu announces: தமிழ்நாடு அரசு, 120 சிறுபான்மையினருக்கான புனித பயண நிதி உதவியாக 12 ரூபாய் இலட்சம் வழங்குகிறது. பயணிக்க விரும்புபவர்கள் www.bcmbcmw.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ECS மூலம் நேரடி பணமாற்றம் செய்யப்பட்டு பயணிகள் பயனடைவார்கள். பயணத்திற்கான முக்கிய தலங்கள் இந்தியா மற்றும் நேபாளம், பாகிஸ்தானில் உள்ளன.

புனித ஸ்தலங்களுக்கு போறீங்களா? தமிழக அரசு ரூ.10000 அறிவிப்பு…
தமிழக அரசுImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Jul 2025 13:49 PM

விழுப்புரம் ஜூலை 23: தமிழ்நாடு அரசு (Government of Tamil Nadu), புத்த, சமண, சீக்கிய மதங்களைச் (Buddhism, Jainism, and Sikhism) சேர்ந்த 120 நபர்களுக்காக ஆண்டுதோறும் புனித பயண நிதியாக ₹12 இலட்சம் உதவி வழங்குகிறது. ஒவ்வொருவருக்கும் ₹10,000 அளவிலான மானியம் வழங்கப்படும். பயணத்திற்கான முக்கிய தலங்கள் இந்தியா மற்றும் நேபாளம், பாகிஸ்தானில் உள்ளன. 01.07.2025க்கு பிறகு பயணிக்கும் நபர்களுக்கு ECS மூலம் நேரடி பணமாற்றம் செய்யப்படும். விண்ணப்ப படிவங்கள் ஆன்லைனில் www.bcmbcmw.tn.gov.in-ல் கிடைக்கும். 30.11.2025க்குள் விண்ணப்பங்களை சென்னை சேப்பாக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

புனித பயணத்திற்கான நிதி உதவி அறிவிப்பு

விழுப்புரம்: புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் சிறுபான்மையினர் நலனுக்காக, தமிழ்நாடு அரசு வருடந்தோறும் நபர் ஒன்றுக்கு ₹10,000 வீதம் 120 நபர்களுக்கு மொத்தம் ₹12 இலட்சம் நிதி உதவியை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

மூன்று மதங்களுக்கு இடையிலான பயண வாய்ப்பு

இந்த திட்டத்தின் கீழ், 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள தங்களின் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணத்திற்கான செலவினத்திற்கு அரசு உதவியாக நிதி வழங்குகிறது.

Also Read: அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள்: ‘ஒவ்வொரு தீபாவளிக்கும் சேலை, மணமகளுக்கு பட்டுச்சேலை’

பயண இடங்கள் பட்டியல்

புத்த மதம் சார்பாக பீகார், உத்தரபிரதேசம், நேபாளத்தில் உள்ள புனித தலங்கள்; சமணர்களுக்காக இராஜஸ்தான், பீகார், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள புனித இடங்கள்; சீக்கியர்களுக்காக பஞ்சாப், பீகார், மகாராஷ்டிரா மற்றும் பாகிஸ்தானில் உள்ள முக்கிய குருத்வாராக்கள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

மானியம் வழங்கும் முறை

01.07.2025-க்கு பின்னர் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அரசு மானியமாக வழங்கும் தொகை ECS முறை மூலம் நேரடியாக பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

Also Read: உலகின் பழமையான நாடு எது? – இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா அல்ல… 

விண்ணப்பிக்கும் நடைமுறை

விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம் அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.11.2025க்குள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறை ஆணையரிடம் அனுப்ப வேண்டும்.

முக்கிய நாள் மற்றும் முகவரி

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.11.2025. அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005.