Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. முதலிடத்தில் இந்த அதிரடி வீரரா..?

Most Sixes in T20 World Cup: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இருப்பினும், இவரது சாதனையை முறியடிப்பது என்பது எளிதான காரியமல்ல.

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. முதலிடத்தில் இந்த அதிரடி வீரரா..?
ரோஹித் சர்மா - கிறிஸ் கெய்ல் - ஜோஸ் பட்லர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Feb 2026 18:53 PM IST

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) போட்டியானது வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இதுவரை 9 பதிப்புகள் நடந்துள்ளன. அதன்படி, 10வது டி20 உலகக் கோப்பை பதிப்பிலும் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட உள்ளன. இந்தநிலையில், இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலை பற்றி தெரிந்து கொள்வோம். அந்தவகையில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) முதலிடத்தில் உள்ளார். இருப்பினும், இவரது சாதனையை முறியடிப்பது என்பது எளிதான காரியமல்ல.

ALSO READ: 2007 முதல் 2024 வரை.. ஒவ்வொரு அணியும் டி20 உலகக் கோப்பையை வென்றது எப்படி?

டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்:

கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், 2007 முதல் 2021 வரை டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையைப் படைத்துள்ளார். கிறிஸ் கெய்ல் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 33 போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் விளையாடி 63 சிக்ஸர்களுடன் மொத்தம் 965 ரன்கள் எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பையில் கிறிஸ் கெய்ல் 2 சதங்களையும், 7 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

ரோஹித் சர்மா:

முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது இடத்தில் உள்ளார். 2007 முதல் 2021 வரை டி20 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா 47 போட்டிகளிலும் 44 இன்னிங்ஸ்களிலும் விளையாடி மொத்தம் 50 சிக்ஸர்களுடன் 1,220 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இதுவரை ஒரு சதத்தை கூட பதிவு செய்தது கிடையாது.

ஜோஸ் பட்லர்:

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 3வது இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் 35 போட்டிகளில் விளையாடி 43 சிக்ஸர்களுடன் 1013 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், பட்லர் டி20 உலகக் கோப்பையிலும் ஒரு சதத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் வார்னர்:

டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 4வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 41 போட்டிகளில் விளையாடி 40 சிக்ஸர்களுடன் மொத்தம் 984 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: அதிரடியாக தொடங்கும் டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி எப்போது, யாருடன் மோதுகிறது?

விராட் கோலி:

டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 5வது இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலி 35 போட்டிகளில் 34 இன்னிங்ஸ்களில் 30 சிக்ஸர்களுடன் 1292 ரன்கள் அடித்துள்ளார்.

கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்க வாய்ப்பா..?

2026 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோர் டி20யில் ஓய்வு பெற்ற காரணத்திற்காக விளையாட போவதில்லை. 2026 டி2ஒ உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் மட்டுமே விளையாட இருக்கிறார். கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தாலும், மொத்தம் 21 சிக்ஸர்கள் அடிக்க வேண்டும். இது சற்று கடினம் என்றே கூறப்படுகிறது.