IND vs NZ 5th T20: சொந்த ஊரில் விளையாட வந்த சாம்சன்.. விரட்டி விரட்டி கிண்டலடித்த சூர்யகுமார் யாதவ்.. வைரலாகும் வீடியோ!
Suryakumar Yadav- Sanju Samson: கேரளாவின் திருவனந்தபுரத்தில் சஞ்சு சாம்சனின் ரசிகர் பட்டாளத்தை அறிந்த சூர்யகுமார் யாதவ், வீடியோவில் அவரை ஒரு விஐபி போல பாதுகாத்தார். மேலும், தனக்கு முன்னால் இருந்த கூட்டத்தை விலக்குவது கிண்டல் செய்து, இல்லாத ரசிகர்களை வழிவிடுமாறு வலியுறுத்தினார்
இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை அதாவது 2025 ஜனவரி 31ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி (Indian Cricket Team) வீரர்கள் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளனர். தற்போதைய இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலம் கேரளா. மேலும், திருவனந்தபுரம் அவரது பிறந்து வளர்ந்த பகுதியாகும். இந்தநிலையில், சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக விளையாட சொந்த ஊருக்கு வந்தபோது, அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த சிறப்பு வரவேற்பை அவரது கிரிக்கெட் ரசிகரோ அல்லது குடும்பத்தினர் வழங்கவில்லை, மாறாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) வழங்கினார். இதன் பொருள் சஞ்சு சாம்சனின் மெய்க்காப்பாளராக சூர்யகுமார் யாதவ் மாறி கிண்டல் செய்தபடி வந்தார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சாம்சனின் மெய்க்காப்பாளராக மாறிய சூர்யகுமார் யாதவ்:
Make way for @IamSanjuSamson in 𝗚𝗼𝗱’𝘀 𝗼𝘄𝗻 𝗰𝗼𝘂𝗻𝘁𝗿𝘆 😉
🎥 Don’t miss this banter between friends Sanju Samson and Captain Surya Kumar Yadav 😄#TeamIndia | #INDvNZ | @IDFCFirstBank | @surya_14kumar pic.twitter.com/zBAFPmZJGk
— BCCI (@BCCI) January 30, 2026
இந்திய அணி கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்தடைந்த வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவின் சிறப்பம்சம் சூர்யாவுக்கும் சாம்சனுக்கும் இடையிலான விளையாட்டுத்தனமான சேட்டைதான். இந்த வீடியோவானது திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டது. விமானத்தில் இறங்கி சஞ்சு சாம்சன் வெளியேறத் தொடங்கும்போது, சூர்யகுமார் யாதவ் வேகமாக அவருக்கு முன்னால் நுழைந்து, அவரது மெய்க்காப்பாளர் போல நடிக்க தொடங்கினார்.




கேரளாவின் திருவனந்தபுரத்தில் சஞ்சு சாம்சனின் ரசிகர் பட்டாளத்தை அறிந்த சூர்யகுமார் யாதவ், வீடியோவில் அவரை ஒரு விஐபி போல பாதுகாத்தார். மேலும், தனக்கு முன்னால் இருந்த கூட்டத்தை விலக்குவது கிண்டல் செய்து, இல்லாத ரசிகர்களை வழிவிடுமாறு வலியுறுத்தினார். இதையெல்லாம் பார்த்ததும், சஞ்சு சாம்சனால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்.
திருவனந்தபுரம் பற்றி சஞ்சு சாம்சன் என்ன சொன்னார்?
பிசிசிஐ பகிர்ந்த வீடியோவில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் திருவனந்தபுரம் எவ்வளவு சிறப்பானது என்று சஞ்சு சாம்சனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சஞ்சு சாம்சன், “திருவனந்தபுரத்திற்கு வருவது எப்போதும் தனக்கு மிகவும் பிடிக்கும். இந்த முறை இது இன்னும் சிறப்பு வாய்ந்த தருணம்” என்று கூறினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முந்தைய 4 டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தநிலையில், தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் சஞ்சு சாம்சன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.