ICC T20I Rankings: டாப் 10க்குள் மீண்டும் வலம்.. டி20 தரவரிசையில் முன்னேற்றம் கண்ட சூர்யகுமார் யாதவ்..!
Suryakumar Yadav T20I Rankings: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டார். கடந்த 3 போட்டிகளில் 171 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, கடந்த இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், சூர்யகுமார் யாதவ் ஸ்ட்ரைக் ரேட்டும் 200க்கு மேல் உள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான டி20ஐ தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக சூர்யகுமார் யாதவ் தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ளார். இந்திய அணியின் (Indian Cricket Team) டி20ஐ கேப்டன் சூர்யகுமார் யாதவ் சமீபத்திய ஐசிசி டி20ஐ தரவரிசையில் 5 பேட்ஸ்மேன்களை முந்தி 7வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அரைசதத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த சூர்யா, கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 2வது வாரத்தில் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறினார். ஆனால் இப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம் சீஃபர்ட், டிம் டேவிட் மற்றும் டெவால்ட் பிரெவிஸ் ஆகியோரை முந்தி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் 5 நாட்கள்.. பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய அணி!




நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டம்:
Good news for India ahead of their #T20WorldCup defence as a host of their best white-ball players make strong gains on the latest rankings update 👀
Details 👇https://t.co/Wws0OzDf5W
— ICC (@ICC) January 28, 2026
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டார். கடந்த 3 போட்டிகளில் 171 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, கடந்த இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், சூர்யகுமார் யாதவ் ஸ்ட்ரைக் ரேட்டும் 200க்கு மேல் உள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் மேலும் உயரக்கூடும். மேலும், ரன்கள் எடுக்கும் வேகம் தடுக்க முடியாததாக மாறும்.
தரவரிசையில் முதல் 5 பேட்ஸ்மேன்கள்:
ஐசிசி சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் 849 மதிப்பீட்டுடன் 2வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா 781 மதிப்பீட்டுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 770 மதிப்பீட்டுடன் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் 763 மதிப்பீட்டுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சு தரவரிசையிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கமா?
பேட்டிங் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் இருப்பது போல, டி20 பந்துவீச்சு தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 787 மதிப்பீட்டுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தவிர, முதல் 10 தரவரிசையில் வேறு எந்த இந்திய பந்துவீச்சாளர்களும் இடம்பெறவில்லை.
ALSO READ: உலகக் கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்..? ஐசிசி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்:
ஐசிசி டி20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா ஒரு இடம் முன்னேறி, 248 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா 289 மதிப்பீட்டைப் பெற்று ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.