IND vs NZ 2nd T20: சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகள்.. சிறப்பு சாதனையை படைத்த இந்திய அணி!
Indian Cricket Team: ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, ஷாஹீர்வீர் நரனாயன் சிங் ஸ்டேடியத்தில் இந்திய அணி களமிறங்கியபோது, சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய தனித்துவமான சாதனையை படைத்தது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி (IND vs NZ 2nd T20) வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் களமிறங்குவதன் மூலம் சொந்த மண்ணில் இந்திய அணி சிறப்பான சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய அணி (Indian Cricket Team) புதிய உலக சாதனை படைத்தது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி எத்தகைய சாதனையை படைத்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகல்.. மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் வங்கதேசம்..?
சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகள்:
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, ஷாஹீர்வீர் நரனாயன் சிங் ஸ்டேடியத்தில் இந்திய அணி களமிறங்கியபோது, சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய தனித்துவமான சாதனையை படைத்தது. மேலும், இந்த சாதனையை படைத்த உலகின் மூன்றாவது அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்தனர்.




முன்னதாக, டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 100 போட்டிகளில் விளையாடிய சாதனை நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மட்டுமே இந்த சாதனையை படைத்தனர். முன்னதாக, நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் மொத்தம் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதே நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் 108 போட்டிகளில் விளையாடிய சாதனையையுடன் 2வது இடத்திலுள்ளது.
ALSO READ: 15.2 ஓவர்களில் 209 ரன்கள் சேஸ்.. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி அசத்தல்!
3வது இடத்தில் இந்திய அணி:
சொந்த மண்ணில் அதிக போட்டிகளில் விளையாடிய பட்டியலில் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது. இதுவரை இந்திய அணி 265 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் 100 போட்டிகள் இந்தியாவில் விளையாடப்பட்டுள்ளன. இதன் மூலம், சொந்த மண்ணில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய சிறப்பு சாதனையை இந்திய அணி இணைத்துள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 265 டி20 போட்டிகளில் 183 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 73 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மீதமுள்ள போட்டிகளில் 7 போட்டிகள் டையில் முடிந்துள்ளன. மேலும், 6 போட்டிகள் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. இதன் பொருள், டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற உலக சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது.