IND vs NZ 2nd T20: 15.2 ஓவர்களில் 209 ரன்கள் சேஸ்.. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி அசத்தல்!
Indian Cricket Team: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 209 என்ற இலக்கை வெறும் 15 ஓவர்களில் விரட்டி வெற்றி பெற்றது. இத்ன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான இரண்டாவது (IND vs NZ 2nd T20) டி20 போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் எடுத்தது. இந்த மிகப்பெரிய இலக்கை துரத்திய இந்திய அணி, வெறும் 15.2 ஓவர்களில் 209 இலக்கை எட்டியது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை எட்டிய சாதனையை இந்திய அணி (Indian Cricket Team) பதிவு செய்தது.
ALSO READ: கோரிக்கை நிராகரிப்பு! 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசம்..!




200 ரன்களை கடந்தும் தோற்ற நியூசிலாந்து:
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டெவன் கான்வே மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோர் பவர்பிளேயில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தனர். பின்னர் ரச்சின் ரவீந்திர 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாட, பின்னர் உள்ளே வந்த கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார். மேலும், கிளென் பிலிப்ஸ் 19 ரன்களும், டேரில் மிட்செல் 18 ரன்களும் எடுத்தனர். இதன் விளைவாக, நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதிவேகமாக இலக்கை துரத்திய இந்திய அணி:
As breathtaking as it can get 💥#TeamIndia sail over the finish line with 7⃣ wickets to spare in Raipur ⛵️
With that, they lead the series 2⃣-0⃣ 👏
Updates ▶️ https://t.co/8G8p1tq1RC#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/UXOo96Qbup
— BCCI (@BCCI) January 23, 2026
இந்தியா ஆரம்பத்தில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், 3வது இடத்தில் களமிறங்கிய இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்கள் எடுத்தார். இதனுடன், இஷான் வெறும் 21 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நியூசிலாந்திற்கு எதிராக ஒரு இந்திய பேட்ஸ்மேன் எடுத்த அதிவேகமான டி20 அரைசதமாகும்.
நீண்ட நாட்களாக பார்ம் அவுட்டில் தவித்த சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியிடன் 82 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இது இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை அடைய உதவியது. இதன் மூலம், 16 ஓவர்களுக்குள் 200+ ரன்கள் இலக்கை துரத்திய முதல் அணியாக இந்தியா ஆனது. இறுதியில் சிவம் துபேயும் களமிறங்கி 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: பிசிசிஐ எந்த வீரருக்கும் ரூ.7 கோடி சம்பளம் வழங்காதா? விராட்-ரோஹித்துக்கு குறையும் சம்பளம்!
இந்திய அணி உலக சாதனை படைப்பு:
இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200க்கும் மேற்பட்ட இலக்கை வேகமாக துரத்தியதற்கான சாதனையை இந்தியா படைத்தது. முன்னதாக, 200க்கும் மேற்பட்ட இலக்கை வேகமாக துரத்தியதற்கான சாதனையை பாகிஸ்தான் வைத்திருந்தது. நியூசிலாந்து அணியை 24 பந்துகள் மீதமிருந்த நிலையில் வீழ்த்தியது.