IND vs NZ 2nd T20: வெற்றியை தொடருமா இந்திய அணி..? தடை போடுமா நியூசிலாந்து? பிட்ச் யாருக்கு சாதகம்?
IND vs NZ 2nd T20 Match Preview: நாக்பூரில் வெற்றியுடன் தொடரைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது டி20 போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் களமிறங்க உள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்திய கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் (IND vs NZ T20 Series) கொண்ட டி20 தொடரின் 2வது போட்டி இன்று அதாவது 2026 ஜனவரி 22ம் தேதி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. நாக்பூரில் வெற்றியுடன் தொடரைத் தொடங்கிய இந்திய அணி (Indian Cricket Team), இரண்டாவது டி20 போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் களமிறங்க உள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ALSO READ: கோரிக்கை நிராகரிப்பு! 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசம்..!
பிட்ச் எப்படி..?
இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி நடைபெறும் ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் தட்டையானது. இருப்பினும், நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை வழங்கும். எனவே, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களை அடிப்பது எளிதாகிறது. அதேநேரத்தில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சில உதவிகள் கிடைக்கலாம்.




டாஸ் யாருக்கு சாதகம்..?
ராய்ப்பூரில் டாஸ் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. டாஸ் வென்று முதலில் பந்துவீசும் அணிக்கு போட்டி சாதகமாக அமையலாம். இந்த ஸ்டேடியத்தில் மாலை நேர போட்டிகளில் பனி ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் அணி இலக்கை எளிதாக துரத்தும்.
வானிலை எப்படி..?
2026 ஜனவரி 23ம் தேதி ராய்ப்பூரில் வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும். வெயில் இருக்கும் என்பதால், மழை பெய்ய 0 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. மணிக்கு 8 கிமீ வேகத்தில் காற்று வீசும். இது போட்டிக்கு எந்த இடையூறு விளைவிக்காது.
கணிக்கப்பட்ட இந்திய அணி:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
ALSO READ: அக்சர் படேலின் விரல் காயம்.. பதற்றத்தில் பிசிசிஐ.. டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் மாற்றமா?
இந்திய அணியின் முழு விவரம்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்ஷித் ராணா மற்றும் ரவி பிஷ்னோய்