Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் ஸ்பான்சராக கூகிளின் AI நிறுவனம்.. பிசிசிஐக்கு கொட்டப்போகும் கோடிகள்..!

IPL Sponsorship: இந்தியாவில் ஜெமினி மற்றும் ChatGPT போன்ற AI தளங்கள் இனி தொழில்முறை பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, சாதாரண மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கிரிக்கெட் பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் அனுபவங்களுக்கு இந்த தளங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால்தான் இந்த நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே தங்கள் வரம்பை விரிவுபடுத்த கணிசமான தொகைகளை முதலீடு செய்யத் தயாராக உள்ளன.

IPL 2026: ஐபிஎல் ஸ்பான்சராக கூகிளின் AI நிறுவனம்.. பிசிசிஐக்கு கொட்டப்போகும் கோடிகள்..!
ஐபிஎல் - கூகுள் ஜெமினிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Jan 2026 15:15 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), ஐபிஎல் 2026க்கு (IPL 2026) முன்னதாக ஒரு பெரிய மற்றும் பிளாக்பஸ்டர் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. கூகிளின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி, பிசிசிஐயுடன் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக ரூ. 270 கோடி (தோராயமாக 2.7 பில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பிசிசிஐ இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் ரூ. 90 கோடி (தோராயமாக 9 பில்லியன் டாலர்கள்) பெறும்.

இந்த ஒப்பந்தம் குறித்து பி.டி.ஐ-யிடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், இந்த ஒப்பந்தம் வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே என்றும், ஐ.பி.எல்-இன் உலகளாவிய பிராண்ட் மதிப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் கூறினார். ஐ.பி.எல் ஏற்கனவே உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரபலமான டி20 லீக்காக மாறியுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் ஸ்பான்சராக வருவது, கிரிக்கெட்டில் புதிய பரிமாணத்தை தரும் என்று நம்பப்படுகிறது.

ALSO READ: ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வா..? ஹிண்ட் கொடுத்த ரவீந்திர ஜடேஜா!

கிரிக்கெட்டில் AI நிறுவனங்கள்:


ஜெமினியின் இந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே வளர்ந்து வரும் தொடர்பை நிரூபிக்கிறது. முன்னதாக, கூகிளுக்கு போட்டியாக AI தளமான ChatGPT, மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) ஸ்பான்சராக அறிவிக்கப்பட்டது. இதன் பொருள், AI நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் ஆண்கள் மற்றும் மகளிர் லீக்குகளான ஐபிஎல், மகளிர் பிரீமியர் லீக்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறார்கள்.

மகளிர் பிரீமியர் லீக் உடனான ChatGPT-யின் பார்ட்னர்ஷிப் அறிவிக்கப்பட்டபோது, ​​பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, இதுபோன்ற உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டுகளின் கூட்டமைப்பு ரசிகர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, மகளிர் கிரிக்கெட்டையும் வலுப்படுத்தும் என்று கூறியிருந்தார்.

இந்தியாவில் ஏஐ ஆதிக்கம்:

இந்தியாவில் ஜெமினி மற்றும் ChatGPT போன்ற AI தளங்கள் இனி தொழில்முறை பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, சாதாரண மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கிரிக்கெட் பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் அனுபவங்களுக்கு இந்த தளங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால்தான் இந்த நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே தங்கள் வரம்பை விரிவுபடுத்த கணிசமான தொகைகளை முதலீடு செய்யத் தயாராக உள்ளன.

ALSO READ: இன்று இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி! யாருக்கு சாதகம்..? பிட்ச் ரிப்போர்ட், அணி விவரம் இதோ!

ஐபிஎல் 2026 எப்போது தொடங்கும்?

2026 டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு ஐபிஎல் 2026 தொடங்கும். உலகக் கோப்பை 2026 பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும். அதன் பிறகு, ஐபிஎல் 2026 போட்டிகள் 2026 மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும். இறுதிப் போட்டி 2026 மே 31 ஆம் தேதி நடைபெறும். இருப்பினும், முழு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த அட்டவணை குறித்து வருகின்ற 2026 பிப்ரவரியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.