T20 World Cup 2026: பொறுமை இழந்த ஐசிசி.. ஸ்காட்லாந்துக்கு அழைப்பு.. வெளியேறும் வங்கதேசம்..?
Scotland will Replace Bangladesh: ஐசிசி மற்றும் பிசிபி இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் விளையாடுவது தொடர்பான சர்ச்சைக்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பிசிசிஐயின் உத்தரவின் பேரில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 2026 இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இது தொடங்கியது.
இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கு இடையிலான கிரிக்கெட் தொடர்பான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர்பான சர்ச்சை தற்போது முடிவுக்கு வர உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நாளை அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி போட்டியில் விளையாடும் அணியை முடிவு செய்யும். வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) எடுத்துள்ள முடிவின்படி, டி20 உலகக் கோப்பை 2026ல் வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்தை சேர்ப்பது குறித்து ஐசிசி பரிசீலித்து வருகிறது. இருப்பினும், இது தொடர்பாக ஐசிசி இன்னும் ஸ்காட்லாந்துடன் எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. 2026 ஜனவரி 21 ஆம் தேதிக்குள் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்குமாறு ஐசிசி பிசிபியிடம் கேட்டுக் கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. ஒருவேளை வங்கதேசம் இந்தியா வர மறுத்தால், ஸ்காட்லாந்து வங்கதேச இடத்தில் போட்டியில் விளையாடும்.
ALSO READ: இந்திய ஜெர்சியில் விராட் – ரோஹித் அடுத்து எப்போது களமிறங்குவார்கள்..? யாருடன் மோதும் இந்திய அணி?




2026 டி20 உலகக் கோப்பைக்கு ஐசிசி முக்கிய முடிவு:
🚨 BANGALDESH CRICKET IN BIG TROUBLE 🚨
– Scotland will replace Bangladesh in the T20 WC 2026, if they don’t travel to India 🇮🇳
– Wednesday is the deadline for BCB to submit their participation for the T20 World Cup 😲
– What’s your take 🤔pic.twitter.com/OXreqbiyly
— Richard Kettleborough (@RichKettle07) January 19, 2026
இந்தியாவில் பாதுகாப்பு பிரச்சனைகளை காரணம் காட்டி, வங்கதேசம் தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் கோரிக்கை விடுத்தது. இருப்பினும், ஐசிசி வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்தது. இதன் விளைவாக 2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டாம் என்று பிசிபி முடிவு செய்தது. கிடைத்த ஊடக அறிக்கைகளின்படி, ஐசிசி வங்கதேச அணிக்கு எதிராக முடிவு செய்தால், ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கலாம். இருப்பினும், இது தொடர்பாக ஐசிசி கிரிக்கெட் ஸ்காட்லாந்தை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
ALSO READ: வங்கதேசத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்.. டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகுகிறதா?
இந்தியாவிற்கு வர மறுக்கும் பிசிபி:
ஐசிசி மற்றும் பிசிபி இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் விளையாடுவது தொடர்பான சர்ச்சைக்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பிசிசிஐயின் உத்தரவின் பேரில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் 2026 இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இது தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறும் குழு போட்டிகளுக்காக அதன் வங்கதேச அணியை இந்தியாவுக்கு பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என பிசிபி அறிவித்தது. போட்டி அட்டவணை ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில், போட்டிகளை இலங்கையுடன் இணைந்து நடத்தும் இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.