Bangladesh Cricket: இந்தியாவுடன் எதிர்ப்பு! வங்கதேச வீரர்களின் ஸ்பான்சர்ஷிப்பை முடிக்கும் முக்கிய நிறுவனம்!
India Bangladesh Controversy: 2026 டி20 உலகக் கோப்பைக்கான குரூப் சி-யில் வங்கதேசம், இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்குகிறது. தொடக்க நாளில் வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் விமர்சித்தனர். இதற்கு காரணம் 2026 ஐபிஎல் (IPL 2026) மினி ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை வாங்கியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்ப்பை சந்தித்தது. பிசிசிஐ (BCCI) அறிவுறுத்தல்களைப் பின்பற்றி,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்தாபிசுரை விடுவித்தது. இந்த சம்பவம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை கோபத்தை தூண்டியது. இந்தநிலையில் இப்போது, மீரட்டை தளமாகக் கொண்ட எஸ்.ஜி. கிரிக்கெட் உபகரண நிறுவனம் வங்கதேச வீரர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ALSO READ: இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி எப்போது..? எந்த நேரத்தில் நடைபெறும்?




ஒப்பந்தம் முறித்துக் கொள்ள காரணம் என்ன..?
A big blow for Bangladesh cricket :
– India’s SG bat brand decided not to renew sponsorships with several Bangladesh players, including Litton Das, Mominul Haque, and Yasir Ali Rabbi.
– For Litton, this means loss of customised gear and a steady commercial income.
– The… pic.twitter.com/36v9OSPKAT— Vipin Tiwari (@Vipintiwari952) January 8, 2026
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, 2026 டி20 உலகக் கோப்பைக்காக வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்று முடிவு செய்தது. பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, தனது போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு ஐ.சி.சி-யிடம் பிசிபி கோரிக்கை விடுத்தது. மேலும், இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒளிபரப்பை வங்கதேச அரசு தடை செய்தது. இருப்பினும், வங்கதேசம் எந்த அவசர முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்று முன்னாள் வங்கதேச கேப்டன் தமீம் இக்பால் கூறியபோது, வங்கதேச இயக்குநர் அவரை “இந்திய ஏஜெண்ட்” என்று கேலி செய்தார்.
வங்கதேச வீரர்களுக்கு மிகப்பெரிய அடி:
மீரட்டை தளமாகக் கொண்ட எஸ்.ஜி. கிரிக்கெட் உபகரண நிறுவனம் பல வங்கதேச வீரர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. இந்தநிலையில், வங்கதேச வீரர்களுடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கையின்படி, லிட்டன் தாஸும் எஸ்.ஜி. கிரிக்கெட் உபகரண நிறுவனத்தின் பேட்டை பயன்படுத்தி வருகிறார். வரவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை 2026ல் லிட்டன் தாஸ் வங்கதேச கேப்டனாக உள்ளார். லிட்டர் தாஸ் மட்டுமின்றி, யாசிர் ரப்பி மற்றும் மோமினுல் ஹக் ஆகியோரும் அதே நிறுவனத்தின் உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் வங்கதேசத்தின் 3 போட்டிகள்:
2026 டி20 உலகக் கோப்பைக்கான குரூப் சி-யில் வங்கதேசம், இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை 2026 பிப்ரவரி 7ம் தேதி தொடங்குகிறது. தொடக்க நாளில் வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. வங்கதேசத்தின் இரண்டாவது போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 9ம் தேதி இத்தாலிக்கும், மூன்றாவது போட்டி 2026 பிப்ரவரி 14ம் தேதி இங்கிலாந்துக்கும் எதிராக நடைபெறுகிறது. வங்கதேசத்தின் முதல் மூன்று போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளன. 2026 பிப்ரவரி 17ம் தேதி நேபாளத்திற்கு எதிரான நான்காவது போட்டிக்காக மும்பை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடும்.
ALSO READ: டெஸ்ட் பயிற்சியாளர் மாற்றமா? VVS லட்சுமணுடன் பிசிசிஐ அதிகாரிகள் ரகசியம் கூட்டம்! என்ன நடந்தது?
2026 டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி:
லிட்டன் தாஸ் (கேப்டன்), டான்சித் ஹசன், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், பர்வேஸ் ஹொசைன் எமன், ஷமிம் ஹொசைன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், காசி நூருல் ஹசன் சோஹன், நஸூம் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷைஃப் உதின், ஷோய்ப் உதின், ஷோமித் அஹ்மத்.