Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026 FIFA World Cup: 2026 உலகக் கோப்பை எப்போது தொடக்கம்? எந்தெந்த அணிகள் பங்கேற்பு? முழு விவரம்!

2026 FIFA World Cup Groups are Set: வருகின்ற 2026ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி தொடங்கும் FIFA உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 FIFA உலகக் கோப்பைக்காக தகுதிச் செயல்முறை 27 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. FIFA உலகக் கோப்பை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2026ம் ஆண்டு 104 போட்டிகள் இடம்பெறவுள்ளது.

2026 FIFA World Cup: 2026 உலகக் கோப்பை எப்போது தொடக்கம்? எந்தெந்த அணிகள் பங்கேற்பு? முழு விவரம்!
2026 உலகக் கோப்பைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Dec 2025 08:08 AM IST

2026 FIFA உலகக் கோப்பைக்கான குரூப் மற்றும் அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அல்ஜீரியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா கேப்டனுமான லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தை காண கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 FIFA உலகக் கோப்பையில் (2026 FIFA World Cup) மெஸ்ஸி களமிறங்குவதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 6வது முறையாக பங்கேற்க வாய்ப்புள்ளது. இருப்பினும்,மெஸ்ஸி (lionel messi) இன்னும் அதிகாரப்பூர்வமாக விளையாடுவார் என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் விளையாடாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று கருதப்படுகிறது. FIFA உலகக் கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மினி ஏலத்தில் 1355 வீரர்கள் பதிவு.. தூக்க காத்திருக்கும் அணிகள்.. பிசிசிஐ விரைவில் பட்டியல் வெளியீடு!

23வது ஃபிபா உலகக் கோப்பை பதிப்பு:

முதல் போட்டி மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறும்.
இது FIFA உலகக் கோப்பையின் 23வது பதிப்பாகும். இந்த உலகக் கோப்பை போட்டிகள் 16 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், முதல் முறையாக 3 நாடுகள் ஒரே நேரத்தில் போட்டியை நடத்துகின்றன. இந்த ஆண்டு, உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டி வருகின்ற 2026ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி மெக்சிகோ நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியை நடத்தும் நாடுகளான மெக்சிகோவும் தென்னாப்பிரிக்காவும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும். அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகள் உலகக் கோப்பையை நடத்துவது இதுவே முதல் முறை.

போட்டியிடும் 48 நாடுகள்:


வருகின்ற 2026ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி தொடங்கும் FIFA உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 FIFA உலகக் கோப்பைக்காக தகுதிச் செயல்முறை 27 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. FIFA உலகக் கோப்பை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2026ம் ஆண்டு 104 போட்டிகள் இடம்பெறவுள்ளது.

ALSO READ: ஐபிஎல்லில் இந்த 5 வெளிநாட்டு வீரர்கள்.. சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள்..!

FIFA உலகக் கோப்பை 2026 குழுக்கள்:

  • குழு ஏ – மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, கொரியா குடியரசு, ஐரோப்பிய பிளேஆஃப் டி சுற்றில் தகுதி பெற்ற அணி
  • குழு பி – கனடா, ஐரோப்பிய பிளேஆஃப் ஏ சுற்றில் தகுதி பெற்ற அணி, கத்தார், சுவிட்சர்லாந்து
  • குழு சி – பிரேசில், மொராக்கோ, ஹைட்டி, ஸ்காட்லாந்து
  • குழு டி – அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய பிளேஆஃப் சி சுற்றில் தகுதி பெற்ற அணி
  • குழு இ – ஜெர்மனி, குராக்கோ, ஐவரி கோஸ்ட், ஈக்வடார்
  • குழு எஃப் – நெதர்லாந்து, ஜப்பான், ஐரோப்பிய பிளேஆஃப் பி சுற்றில் தகுதி பெற்ற அணி, துனிசியா
  • குழு ஜி – பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து
  • குழு ஹெச்- ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே
  • குழு ஐ – பிரான்ஸ், செனகல், ஃபிஃபா பிளேஆஃப் 2 சுற்றில் தகுதி பெற்ற அணி, நார்வே
  • குழு ஜே – அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்
  • குழு கே – போர்ச்சுகல், FIFA பிளேஆஃப் 1 சுற்றில் தகுதி பெற்ற அணி, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா
  • குழு எல் – இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா