Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Olympics 2028: ஐசிசி வைத்த செக்! 2028 ஒலிம்பிக்கில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா..?

Olympics Cricket Team Qualification: ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் விளையாடப்படும். இதில் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளின் போட்டிகள் உட்பட மொத்தம் 28 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 2028 ஜூலை 12ம் தேதி முதல் தொடங்க அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

Olympics 2028: ஐசிசி வைத்த செக்! 2028 ஒலிம்பிக்கில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா..?
2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Nov 2025 16:53 PM IST

ஒலிம்பிக்கில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, கிரிக்கெட் போட்டிகள் (Cricket) களமிறங்கவுள்ளது. இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (Olympics 2028) ஆண்கள் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் டி20 வடிவத்தில் விளையாடப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முறை தகுதி போட்டிகள் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் அணிகள் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல முக்கிய அணிகளுக்கு சவாலாக இருக்கலாம். ஐசிசியின் புதிய விதி குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒலிம்பிக் போட்டியின் வாய்ப்புகளை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தகுதி முறையை மாற்றிய ஐசிசி:

2028 ஒலிம்பிக்கிற்கான தகுதிப் பாதை இனி ஐ.சி.சி டி20 தரவரிசையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்காது என்று ஐசிசி சமீபத்தில் துபாயில் நடந்த வாரியக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியது. இந்த முறை, கண்டம் வாரியாக அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். இதன் காரணமாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஓசியானியா மற்றும் அமெரிக்காவிலிருந்து முதலிடத்தில் உள்ள அணி ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி பெறும். ஐசிசி இந்த அட்டவணையை கிட்டத்தட்ட இறுதி செய்து, விரைவில் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை வெளியிடத் தயாராகி வருகிறது.

ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெறும்..? இடத்தை பட்டியலிட்ட பிசிசிஐ!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற ஏன் வாய்ப்பு குறைவு..?

ஐசிசி மற்றும் ஒலிம்பிக் போன்ற உலகத்தரம் வாய்ந்த போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதை காண எப்போதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். இருப்பினும், 2028ம் ஆண்டு நடைபெறவுள்ல ஒலிம்பிக்கில் இது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. ஆசியாவிலிருந்து ஒரு அணி மட்டுமே நேரடி நுழைவு பெறும் என்பதால், அதன் தற்போதைய செயல்திறன் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் இந்தியா இந்த இடத்திற்கு உள்ளே நுழையும். அதேநேரத்தில், பாகிஸ்தானின் ஒலிம்பிக் தகுதி இப்போது பெரும்பாலும் உலகளாவிய தகுதிச் சுற்றுப் போட்டியைச் சார்ந்தது. மேலும் பாகிஸ்தான் தகுதிச் சுற்றுகள் மூலம் தகுதி பெற்றாலும், இருவருக்கும் இடையிலான போட்டிகள் குரூப் ஸ்டேஜ் மற்றும் நாக் அவுட் சுற்றுகளை பொறுத்து அமையும் என்பதால், இந்தியா vs பாகிஸ்தான் மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.

ஐசிசி டி20 தரவரிசைப்படி, கண்டத்தின் தகுதிச் சுற்றில் நேரடி ஒலிம்பிக் இந்தியா (ஆசியா), ஆஸ்திரேலியா (ஓசியானியா), இங்கிலாந்து (ஐரோப்பா) மற்றும் தென்னாப்பிரிக்கா (ஆப்பிரிக்கா) ஆகிய நாடுகள் நேரடியாக தகுதிப்பெறும். இருப்பினும், அமெரிக்க கண்டத்தில் இருந்து எந்த அணி தகுதிபெறும் என்பது தெரியவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸை தளமாக கொண்ட அமெரிக்கா, போட்டியை நடத்தும் என்பதால் நேரடியாக தகுதி பெறலாம். ஆனால், இதே கண்டத்தில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20யில் வடிவத்தில் முன்னணியில் உள்ளதால், இதன் இடம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அமெரிக்கா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் எந்த அணி உள்ளே நுழையும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை ஐசிசி மற்றும் ஒலிம்பிக் நிர்வாகமே முடிவு செய்யும்.

ALSO READ: மகளிர் உலகக் கோப்பையில் இனி 10 அணிகள்.. எண்ணிக்கையை அதிகரித்த ஐசிசி!

ஒலிம்பிக் கிரிக்கெட் எப்போது விளையாடப்படும்?


ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் விளையாடப்படும். இதில் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளின் போட்டிகள் உட்பட மொத்தம் 28 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 2028 ஜூலை 12ம் தேதி முதல் தொடங்க அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு கிரிக்கெட்டுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக மட்டுமல்லாமல், உலகளாவிய பல விளையாட்டு அரங்கில் அதற்கு ஒரு புதிய அடையாளத்தையும் கொடுக்கும்.