இரவு நேரத்தில் திடீரென குழந்தை படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து, சத்தமாக கத்தி, கண்களை பெரிதாகத் திறந்து பயந்த நிலையில் காணப்படலாம். பெற்றோர் அருகில் சென்றாலும் அவர்கள் பதில் அளிக்காமல், பார்க்காதது போல இருப்பார்கள். சில நேரங்களில் கைகளை ஆட்டி, வியர்த்து அல்லது அறைக்குள் நடந்து செல்லவும் வாய்ப்புள்ளது. ஆனால் மறுநாள் காலை, அந்த சம்பவம் குறித்து குழந்தைக்கு எந்த நினைவும் இருக்காது.