உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் நடந்த கண் அறுவை சிகிச்சை முகாம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின்னர் 9 நோயாளிகளின் கண்களை முழுமையாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 9 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை முற்றிலும் இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 1ஆம் தேதி நியூ ராஜேஷ் ஹைடெக் மருத்துவமனையில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.