மகாராஷ்டிராவில் இருந்து வெளிவந்த ஒரு முக்கியமான தீர்ப்பு, கணவரில்லாமல் இருக்கும் பெண் மற்றும் அவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. தந்தையின் பெயர், குடும்பப் பெயர் அல்லது ஜாதியை கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என்ற பழைய நடைமுறையை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒரு குழந்தை முழுமையாக தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டால், அவளது அடையாளத்தில் தந்தையின் பெயரை கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.