அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் சுகர் லாண்ட் நகரில் அமைந்துள்ள 90 அடி உயர ஆஞ்சநேயர் சிலை குறித்து புதிய அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. மேக் அமெரிக்கா கிரேட் அகைன் இயக்கத்துடன் தொடர்புடைய டெக்சாஸ் குடியரசுக் கட்சி தலைவர் கேரலோஸ் டுர்சியோஸ், இது டெக்சாஸ், நியூடெல்லி அல்ல. வெளிநாட்டவர்கள் அமெரிக்காவை கைப்பற்றுகின்றனர் என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தச் சிலை ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோவிலில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவில் உள்ள உயரமான இந்து சிலைகளில் ஒன்றாகும். கோவில் நிர்வாகம் இதை வலிமை, பக்தி மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் சின்னமாக விளக்குகிறது.