Rohit Sharma: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மாஸ்.. உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனானார் ரோஹித் சர்மா..!
ICC ODI Rankings: 2025 அக்டோபர் 29ம் தேதியான இன்று ஐசிசி தனது ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ரோஹித் சர்மா 781 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்த நிலையில், சுப்மன் கில் 745 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் (IND vs AUS ODI Series) தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா (Rohit Sharma) உலகின் புதிய நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக முன்னேற்றம் அடைந்தார். முன்னதாக, இந்த தரவரிசை பட்டியலில் சுப்மன் கில் முதலிடத்தில் இருந்தார். இப்போது 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா அற்புதமாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 73 ரன்களும், 3வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 3வது போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
ரோஹித் சர்மா முதலிடம்:
BCCI POSTER FOR ROHIT SHARMA. 💯 pic.twitter.com/F5silc0JcS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 29, 2025




2025 அக்டோபர் 29ம் தேதியான இன்று ஐசிசி தனது ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ரோஹித் சர்மா 781 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்த நிலையில், சுப்மன் கில் 745 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரான் 764 மதிப்பீட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ALSO READ: ICUவில் இருந்து வெளியே வந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. சிட்னிக்கு செல்லும் குடும்பத்தினர்..!
விராட் கோலி பின்னடைவு:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து 168 ரன்கள் எடுத்து இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். ஐசிசி தரவரிசையில் கோலி ஒரு சரிவை சந்தித்திருந்தாலும், கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டிக்கு முன்பு, கோலி தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டாகாமல் ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் கோலி டக் அவுட்டாகாமல் ஆட்டமிழந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை.
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி ஒரு இடம் சரிந்து 725 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் முதல் 10 பேட்ஸ்மேன்களில் 4 இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதன்படி, இந்த பட்டியலில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளனர்.
ALSO READ: விராட் – ரோஹித் விளையாடுவதை அடுத்து எப்போது காணலாம்..? கிடைத்த சூப்பர் அப்டேட்!
சமீபத்திய ஐ.சி.சி தரவரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் முன்னேற்றம் அடைந்துள்ளார். அதாவது, 700 மதிப்பீட்டுடன் 10வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஃபீல்டிங் செய்யும் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது. அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.