RO-KO Back: விராட் – ரோஹித் விளையாடுவதை அடுத்து எப்போது காணலாம்..? கிடைத்த சூப்பர் அப்டேட்!
India - South Africa ODI Series: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்ததாக எப்போது விளையாடுவதை காணலாம் என்ற கேள்விக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வருகின்ற 2025 நவம்பர் மாதம் இந்தியா வர உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனாலும், கடைசி போட்டியிலும் விராட் கோலி அரைசதம் அடித்தார். இதன்மூலம், தங்களது வாழ்க்கையில் கடைசியாக, ஆஸ்திரேலிய மண்ணில் 3 நட்சத்திர பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய தொடரை மறக்கமுடியாததாக மாற்றினர். அதேநேரத்தில், விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) என்ற இந்த இரண்டு நட்சத்திர பேட்ஸ்மேனை சர்வதேச போட்டிகளில் மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது. ரோஹித் மற்றும் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் வடிவங்களில் இருந்து விலகிவிட்டனர். இதன் விளைவாக, விராட் மற்றும் ரோஹித் ஒருநாள் வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
ALSO READ: சிட்னியில் சின்னாபின்னமான சாதனைகள்.. மாபெரும் ரெக்கார்ட்ஸை படைத்த ரோஹித் – கோலி!
விராட் மற்றும் ரோஹித் விளையாடுவதை எப்போது காணலாம்..?
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்ததாக எப்போது விளையாடுவதை காணலாம் என்ற கேள்விக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வருகின்ற 2025 நவம்பர் மாதம் இந்தியா வர உள்ளது. இங்கு இந்திய மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர். இதனை தொடர்ந்து, 3 ஒருநாள் தொடர் மற்றும் 5 டி20 போட்டியும் நடைபெறும்.




அப்படியானால், விராட் மற்றும் ரோஹித் இருவரும் ஒருநாள் தொடரில் இடம்பெறுவார்கள். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 2025 நவம்பர் 30 முதல் தொடங்க உள்ளது. இரு அணிகளும் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள். விராட் மற்றும் ரோஹித் அந்த தொடரில் விளையாடுவார்கள். தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி சத்தீஸ்கரிலும், மூன்றாவது போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும்.
ரோஹித் கூறியது என்ன..?
கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் சிட்னியில் இந்திய அணியின் ஜெர்சியில் விளையாடியபோது இருவரும் ஆஸ்திரேலியாவைப் பற்றிய தங்கள் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். கடந்த 2025 அக்டோபர் 25ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், ரோஹித் 121 ரன்களும், விராட் 74 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது . இருவரும் மீண்டும் ஆஸ்திரேலியாவில் விளையாடத் திரும்ப வாய்ப்பில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.
ALSO READ: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!
போட்டிக்குப் பிறகு ஒளிபரப்பு சேனலின் வர்ணனையாளர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் பேசிய ரோஹித் சர்மா, “சிட்னிக்கு வந்து விளையாடுவதை நான் மிகவும் ரசித்தேன். 2008 ஆம் ஆண்டு எனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ) நினைவு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் மீண்டும் கிரிக்கெட் வீரர்களாக இங்கு வருவோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்தேன். நிறைய வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் ரசித்தோம். கடந்த 15 ஆண்டுகளின் அனைத்து வெற்றிகளையும் நான் மறந்துவிட்டு புதிதாகத் தொடங்கினேன் . நான் இங்கு விளையாடுவதை விரும்புகிறேன், ஒருவேளை விராட் அதே போல் உணரலாம். மிக்க நன்றி ஆஸ்திரேலியா .”என்றார்.